Connect with us
kamal

Cinema News

என்னது ஒரே டேக்கில் எடுத்ததா? கிட்டத்தட்ட 4 மணி நேரமாக நடித்த கமல் – என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிப்பிற்காகவே பிறந்தவர் என்றே சொல்லலாம் நடிகர் கமலை. சினிமா மீதும் நடிப்பின் மீதும் அதிக ஈடுபாடு கொண்ட கமல் புதிய புதிய தொழில் நுட்பங்களை சினிமாவில் புகுத்த வேண்டும் என விரும்புவார்.அதுமட்டுமில்லாமல் புதியதொரு முயற்சியையும் கையில் எடுத்து அதில் சாதனையும் செய்வார்.

அப்படி ஏகப்பட்ட படங்களில் பல சாதனைகளை செய்து காட்டியிருக்கிறார் கமல். அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் மற்றுமொரு படைப்பாக கமல் நடிப்பில் வெளிவந்தது டிக் டிக் டிக் திரைப்படம். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க : மீண்டும் மீண்டுமா!. ஆளை விடுங்கடா சாமி!.. வெற்றிமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் சேதுபதி!..

அதுமட்டுமில்லாமல் திரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கமல் ஒரு பெரிய சாதனையையே செய்திருக்கிறாராம். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக மாதவி நடித்திருப்பார். படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களுமே செம ஹிட்.

kamal1

kamal1

இந்த நிலையில் டிக் டிக் டிக் படத்தின் ஒரு காட்சியில் கமல் மாதவியை லாரில் துரத்தி வருவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். ஒரு கட்டத்தில் லாரி கவிழ்ந்து கமல் கீழே விழ மீண்டும் எழுந்து மாதவியை இழுத்துப் போவது போன்ற காட்சி.

மிகவும் ஆக்‌ஷன் கலந்த திரில்லரோடு எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில் சிங்கில் டேக்கில் கமல் நடித்துக் கொடுத்தாராம். மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 6 மணிக்குத்தான் முடிந்ததாம். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க : சரத்துக்கு நந்தினி மாதிரி ரஜினிக்கும் ஒரு நந்தினி! யாருனு தெரியுமா? இது தெரியாம போச்சே

google news
Continue Reading

More in Cinema News

To Top