அடுத்த சிவகார்த்திகேயன் ஆக கவின் வளர்வார் என நம்பி நெல்சன் கவிதை வைத்து புதிய படத்தை தயாரித்து வருகிறார். ஆனால், கடந்த வாரம் வெளியான கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் மூன்று நாட்களுக்கு பிறகு தியேட்டர்களில் காத்து வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் திரைப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு தமிழ் சினிமாவின் முதல் 100 கோடி படம் என்ற அளவுக்கு பெரும் பில்டப் செய்யப்பட்டது.
Also Read
இதையும் படிங்க: மத்தவங்க பேசட்டும்!.. எனக்கு வேலை இருக்கு!.. இளையராஜா வெளியிட்ட வீடியோ…
ஆனால் அந்த படம் 15 கோடி ரூபாய் வசூலை தாண்டவே சிரமப்பட்டு வருவதாக பிஸ்மி உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் கூறி வருகின்றனர். ஸ்டார் திரைப்படத்தின் திரைக்கதை சொதப்பல் காரணமாக நல்லா வர வேண்டிய படம் நான்கு நாட்களில் நாக் அவுட் ஆகிவிட்டது என அனைவரும் கவின் படத்தை டார் டாராக கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.
ஸ்டார் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே கவினை வைத்து அடுத்ததாக நெல்சன் தயாரிக்க உள்ள பிளடி பெக்கர் படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியானது. அதில், நெல்சனின் உதவி இயக்குனரான சிவபாலன் கவின் நடிப்பில் உருவாக உள்ள பிளடி பெக்கர் படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தளபதி69 படத்தின் கதை இதுதானா? அதுசரி ஏற்கனவே இதே ஸ்டோரிக்கு பல்ப் வாங்கியது தானே!…
அந்த படத்தில் பிச்சைக்காரன் கெட்டப்பில் கவின் நடிக்கவுள்ளதாகவும் டைட்டிலும் பிளடி பெக்கர் என வைக்கப்பட்ட நிலையில், படம் வெளியான பின்னர் அந்த கெட்டப் உனக்கு தேவைப்படலாம் என ரெடின் கிங்ஸ்லி கலாய்த்ததை போலவே நிஜத்திலும் நடந்து இருக்குமா என்கிற அச்சம் தற்போது நெல்சனுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
ஆனாலும், ஸ்டார் படத்தின் தோல்விக்கு கவின் மட்டும் காரணமில்லை என்றும் எல்லாம் இளனின் தவறு தான் என்பதால், சிவபாலனை படத்தை பார்த்து செதுக்க சொல்லியிருக்கிறாராம். மேலும், ஏற்கனவே இயக்குனர் கேட்ட பட்ஜெட்டில் 30% தற்போது குறைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறைந்த செலவில் படம் எடுத்தால் ஓரளவுக்கு லாபத்தை பார்த்துவிடலாம் என்பதால் இந்த முடிவுக்கு நெல்சன் வந்திருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: விஷால் இழுத்துட்டு ஓடுன பொண்ணு கால் கேர்ள்… ஆண்ட்ரியாவிடம் இருக்கும் 200 வைர நெக்லஸ்… பகீர் கிளப்பும் சுசித்ரா…



