நெல்சனுக்காக கொலைவெறியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.! தளபதியா தலைவரா.?!

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு அடுத்த நாள் கே.ஜி.எப்-2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதனால் இந்த இரண்டு படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இதனுடன் வெளியாகும், கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் பாடல், ட்ரைலர் என வெளியாகிவிட்டது. அதற்கான ப்ரோமோஷன்களிலும் அப்படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது. அண்மையில் கூட கே.ஜி.எப் நாயகன் யாஷ் , ' இது அரசியல் அல்ல, பீஸ்ட் VS கே.ஜி.எப் அல்ல, பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் என்று கூட கூறியிருந்தார்.
KGF2விற்கு ஒருநாள் முன்னதாக வெளியாகும் பீஸ்ட் படத்திற்கு ப்ரோமோஷன் என எதனையும் சன் பிக்ச்சர்ஸ் ஆரம்பிக்காமல் இருக்கிறது. டீசர், ட்ரைலர் என எந்த அப்டேட்டும் படக்குழு அறிவிக்காமல் இருக்கிறது.
இதையும் படியுங்களேன் - எங்க போனாலும் இவருக்கு ஏழரை தான் போல.! மீண்டும் சிக்கலில் இயக்குனர் ஷங்கர்.!
இதனால் ரசிகர்கள் மிகவும் கடுப்பில் இருக்கின்றனர். டிவிட்டரில் சன் பிக்ச்சர்ஸிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் பீஸ்ட் இயக்குனர் நெல்சன் டிவிட்டரில் 'நாளை' என பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிக்கர்கள் குழப்பத்தில் உள்ளனர். இவர் தான் ரஜினியின் 169வது திரைப்படத்தை இயக்க உள்ளார். ஆதலால், விஜய் பட அப்டேட் தரப்போகிறாரா அல்லது ரஜினி பட அப்டேட் தரப்போகிறாரா என விஜய் ரசிகர்களை அவரது டிவிட்டர் அக்கவுண்ட்டை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
நாளை…
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022