Nelson for Jailer2: ஜெயிலர் படம் பேய் ஹிட்டானதும் ஆனது நெல்சனுக்கு இருக்கிற மவுசு அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றது. ஜெயிலர் படம் எடுக்கும் போது கூட இந்தப் படம் இந்தளவுக்கு ஹிட் ஆகும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் நடிப்பில் உருவான ஜெயிலர் படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத படமாக மாறிவிட்டது.
இதே கமலின் விக்ரம் படமும் இந்தளவுக்கு ஒரு பெருமையைத்தான் கொண்டிருந்தது. இப்போது ரஜினியும் அதில் சேர்ந்து விட்டார். ஆக 80களின் ராஜ்ஜியத்தை யாராலும் உடைக்க முடியாது என்பதை கமலும் ரஜினியும் நிரூபித்துவிட்டனர்.
இதையும் படிங்க: கோடி கோடியா கொடுத்து ஏன் கஷ்டப்படுறீங்க? சம்பளத்தில் இப்படி ஒரு ஆஃபரா? தனிக்காட்டு ராஜாவா ஜேக்கி
இந்த நிலையில் நெல்சனின் சம்பளம் 55 கோடியாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. அதாவது தங்களுடைய நிறுவனத்திற்கே அடுத்தப் படத்தை எடுப்பதற்கான ஒரு ஒப்பந்தம் தான் இந்த சம்பளம் விவகாரம். ஒரு வேளை ஜெயிலர்2 படமாகக் கூட இருக்கலாம். அந்தப் படத்திற்கான 55 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியிருக்கிறது சன்பிக்சர்ஸ்.
ஆனால் நெல்சனின் ஐடியாவே வேறு. ஜெயிலர்2 படம் ஆரம்பிப்பதற்குள் வேறு யாராவது இதைவிட அதிக சம்பளம் கொடுத்தால் அந்த நிறுவனத்துடன் இணைந்து விடலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். ஏனெனில் ரஜினி இப்போதுதான் த.ச.ஞானவேலுவுடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித் ஃபேன்ஸை மிஞ்சிய தளபதியன்ஸ்… அதுவா? இதுவா? எதையாது சொல்லுங்களேன்பா… எக்ஸில் ஒரே ரவுசா கிடக்கு!
அதனை அடுத்து லோகேஷுடன் இணைய இருக்கிறார். இந்த இரு படங்களுமே முடிய கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம் ஆகும். அதன் பிறகுதான் ரஜினியை வைத்து நெல்சன் மீண்டும் ஒரு படத்தை எடுப்பார். அதுவரைக்கும் நெல்சன் சும்மா இருப்பாரா?
ஆகவே வேறொரு படத்தை எடுக்கு முயற்சியில் நிச்சயமாக இறங்குவார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இவ்ளோ கோடி கொடுத்து நெல்சனை உட்கார வைத்ததை அறிந்து மற்ற நிறுவனங்களும் அதிக சம்பளம் கொடுத்து நெல்சனை தூக்கும் முயற்சியில் வருவார்கள். எப்படி பார்த்தாலும் இந்த 55 கோடியை விட அதிக சம்பளத்தை நெல்சன் அடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: கிச்சானாலே இளிச்சவாயன் தானோ!… விஷால் நல்லது சொன்னாலும் கிழிச்சு தொங்கவிட்டா எப்புடி… என்னப்பா ஆச்சி?
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…