கிச்சானாலே இளிச்சவாயன் தானோ!… விஷால் நல்லது சொன்னாலும் கிழிச்சு தொங்கவிட்டா எப்புடி… என்னப்பா ஆச்சி?

Vishal: மார்க் ஆண்டனி படத்தின் சக்ஸஸ் மீட்டில் விஷால் பேசும் போது 4 அல்லது 5 கோடியில் படம் செய்ய வரும் என நினைக்கும் யாரும் படம் பண்ண கோலிவுட் பக்கம் வர வேண்டும். அந்த பணத்தினை முதலீடு பண்ணிவிட்டு நிம்மதியா இருங்கள். 120 படங்கள் முடங்கி கிடக்கிறது எனப் பேசி இருந்தார்.

விஷாலின் இந்த கருத்து சர்ச்சையாகியது. ஒரு நடிகரே இப்படி பேசலாமா என பலரும் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ச்சியாக சில ட்ரோல்களும் விஷால் மீது வரிசைக்கட்டி பறந்தது. விஷால் சிறு பட்ஜெட் படங்களை தரக்குறைவாக நினைக்கிறாரா?

இதையும் படிங்க: ஏலேய்! ஒன்னு இருந்தாலே முடியாது… இதுல நாலு சேந்தா!! தரையில நடந்தத திரையில காட்ட போறாங்களாமே!

ஏன்? டாடா, குட் நைட், லவ் டூடே படங்கள் ஓடவில்லையா என காரசாரமாக பதில் அளித்தனார். இந்நிலையில் இந்த விஷயம் குறித்து தன்னுடைய யூட்யூப் சேனலில் பேசி இருக்கும் அந்தணன் சின்ன பட்ஜெட் படங்கள் என இவர்கள் குறிப்பிடும் எதுவுமே 5 கோடிக்குள் எடுக்கப்பட்டது இல்லை.

போர்த்தொழில் படத்தில் சரத்குமார், சரத்பாபுவை வைத்துக்கொண்டு 5 கோடியில் எடுக்க முடியுமா கொஞ்சம் யோசித்து பேசிங்கள். அவர் சொன்னது நியாயம் தான். சின்ன பட்ஜெட்டில் எடுக்கும் படங்களை தற்போது தியேட்டர்காரர்களே சரியாக வாங்குவது இல்லை. அப்படி வாங்கினால் கூட இரண்டு நாள் பார்த்துவிட்டு தூக்கி விடுகின்றனர்.

தியேட்டருக்கு கட்டணம் கட்டி தான் ரிலீஸ் செய்யும் நிலை தற்போது இருக்கிறது. குறைந்தது 80 தியேட்டரில் ரிலீஸ் செய்தால் அந்த தியேட்டர்களுக்கான கட்டணத்தினை தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும். இதில் சில கொள்ளை நடக்கிறது. இதனால் நொந்து இருக்கும் தயாரிப்பாளர்கள் மேலும் நடுவீதிக்கு வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்த பாக்யலட்சுமி , கண்ணம்மாவை ஒரு வழியா தேடிட்டாங்கப்பா! இவர்தான் ‘கதாநாயகி’ நிகழ்ச்சியின் வின்னரா?

விஷால் சொன்னது நிஜமான அக்கறை தான். புதுமுக இயக்குனர்கள் எல்லாம் தட்டிமுட்டி ஒரு தயாரிப்பாளர்களை அழைத்து வந்தால் விஷால் இப்படியே சொல்லிவிட்டாரே என கோபம் இருக்கலாம். ஆனால் இது தயாரிப்பாளர்களின் நிலைமையில் இருந்து பார்க்கும் போது அவர் சொன்ன அத்தனையுமே உண்மை தான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Related Articles

Next Story