ஹிட் நாயகனின் வாழ்க்கையில் நடந்த சோகம்.. தோள் கொடுத்த நெப்போலியன்.. அடடே.!
Nepolean: நடிகர் நெப்போலியன் பிறந்தநாளுக்கு தமிழ் திரையுலகத்தில் இருந்து பலர் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி இருந்தது. அந்த வகையில் நடிகர் விதார்த்தும் அமெரிக்கா சென்று அவர் பிறந்தநாளில் கலந்து கொண்டார். சமீபத்தில் இந்தியா திரும்பியவர் தனக்கும் அவருக்குமான நட்பு குறித்து பேசி இருக்கிறார்.
அதில், நான் சினிமாவில் சம்பாரித்த காசை நிறைய சினிமாவிலேயே விட்டுவிட்டேன். ஆனால் என்னிடம் உதவி என வந்தவர்களுக்கு இல்லை என சொன்னது இல்லை. கொஞ்சம் செல்வாக்கான குடும்பம் என்பதால் ஆரம்ப காலங்களில் எனக்கு காசு கஷ்டம் இருந்தது இல்லை.
இதையும் படிங்க: உள்ளே போனதும் நிக்ஷனை பார்த்து கேட்ட ஒரே ஒரு கேள்வி! பொங்கி எழுந்த அர்ச்சனாவின் அப்பா
மேலும், நான் பயின்ற கூத்து பட்டறையில் தான் விமல் பயிற்சி பெற்றார். அப்போ அங்கு அவர் தான் செல்லப்பிள்ளை. நாங்க அவர் தான் முதலில் நடிக்க வருவார் என நம்பினோம். அதே இடத்தில் தான் விஜய் சேதுபதி கணக்கு வழக்கு எழுதி வந்தார்.
நடிக்க தொடங்கவில்லை அவர். பின்னர் ஜூனியராக கொஞ்ச நாள் நடித்தார். தற்போது அவர் இருக்கும் இடம் அவர் நினைத்தது தான் என்றார். சமீபத்திய நிகழ்வு குறித்து கூறும்போது, நான் பிறந்தநாள் விழாவுக்கு வருவேன் என அவரே எதிர்பார்க்கவில்லையாம். என்னை பார்த்த போது அவ்வளவு சந்தோஷப்பட்டார்.
இதையும் படிங்க: நடிகைக்கு அந்த மாதிரி மெசேஜ் அனுப்பிய சிம்பு… இதுக்கு நயன் தான் ஐடியாவாம்.. அடப்பாவிங்களா..!
நிறைய பேசி இருக்கோம். என்னுடைய பிள்ளைக்கான ஸ்கூல் ஃபீஸை மொத்தமாக கட்டிவிட்டார். நான் கொடுத்த போது அதில் ஒரு ரூபாயை கூட அவர் வாங்கவே இல்லை. இங்கு அமைச்சராக இருந்தார். அங்கு போயும் ராஜாவாக தான் வாழ்ந்து வருகிறார். அவர் பிறந்தநாளுக்கு நிறைய பணக்காரர்கள் வந்து தங்கி சிறப்பித்து சென்றனர் எனவும் கூறினார்.