சினிமா உலகில் யாருமே செய்யாத விஷயம்... தன்னலம் கருதாமல் செய்த நெப்போலியன்

by sankaran v |   ( Updated:2024-12-02 06:32:09  )
Actor nepoleon
X

Actor nepoleon

நடிகர்கள் என்பவர்கள் சினிமாவில் மட்டும்தான் நடிக்க வேண்டும். நிஜத்தில் அப்படி நடிக்கக்கூடாது என்று இயக்குனர் சிகரம் பாலசந்தரே தெரிவித்துள்ளார். அந்த வகையில் தனது இமேஜைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னலம் கருதாமல் பிறருக்காக பல விஷயங்களைச் செய்யும் நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகர் நெப்போலியன். அவருக்கு இன்று 61வது பிறந்த நாள்.

புதுநெல்லு புதுநாத்து

பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து படத்தில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்த போது கொடூர வில்லனாகவே நமக்குத் தெரிந்தார். அதன்பிறகு ஹீரோவானார். உயரமான நடிகராக இருந்தது அவருக்கு பிளஸ் பாயிண்ட்.

எஜமான் - தசாவதாரம்

nepoleon

nepoleon

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அவர் நடித்த எஜமான் படம் இன்றும் பேசப்படும். சீவலப்பேரி பாண்டி படத்தில் மீசையை முறுக்கி விட்டு கம்பீரமாக வலம் வந்தார். அந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. கமலின் தசாவதாரம் படத்தில் ஒரு காட்சிக்கே வந்தாலும் நெஞ்சில் நிலைத்து நின்றார். அந்த வகையில் திரைத்துறையிலும் அழுத்தமாகக் கால் பதித்தார். அரசியலிலும் ரொம்பவே ஆக்டிவாக இருந்தார் என்றே சொல்லலாம். அதனால் தான் எம்.பி. ஆனார்.

மகன் திருமணம்

சொந்த வாழ்க்கையில் தான் அவருக்குப் பலவிதமான சவால்கள் இருந்தன. அந்த வகையில் இவரது மூத்த மகன் தனுஷ் தசைச்சிதைவு நோயால் மிகவும் பாதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்காகவே தனது அரசியல் மற்றும் சினிமாவைத் துறந்து அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார். சமீபத்தில் அவரது மகனுக்கு திருமணமும் செய்து வைத்து தந்தைக்கே உரிய கடமையை நிறைவேற்றினார். அதுவும் சாதாரணமாக இல்லாமல் திருமணம் தடபுடலாக நடந்தது.

150 கோடி

Also read: தனுஷ் மட்டும்தான் பண்ணுவாரா?!.. நானும் இறங்குறேன்!.. வேறலெவல் ஸ்கெட்ச் போட்ட சிம்பு!…

ஜப்பானில் நடந்த இந்த திருமணத்திற்கு ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, கலா மாஸ்டர், மீனா என பலரும் வந்து இருந்தனர். அது மட்டும் அல்லாமல் 6 மாதத்திற்குப் பிறகு மீண்டும் அமெரிக்க முறைப்படி திருமணம் நடக்கும் என்றும் அறிவித்து இருந்தார். ஜப்பானில் நடந்த திருமணத்திற்கே 150 கோடி செலவானதாம். அடுத்து இவருக்கு அக்ஷயா என 21 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.

இவ்வளவு மனிதாபிமானமா?

நெப்போலியனுக்குள் இவ்வளவு மனிதாபிமானம் இருக்கிறதா என்பதை அவரது பல செயல்களின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம். இப்படி சினிமா உலகில் யாருமே இது வரை செய்யவில்லை. தன் மகனைப் போல எந்த ஒரு பிள்ளையும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மருத்துவமனையே கட்டியுள்ளார். அதில் வரும் நோயாளிகளுக்கு இலவசமாகவே சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

Nepoleon

Nepoleon

தன் பிள்ளைகளுக்காக சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகினார். கண்ணுக்குத் தெரியாமல் பல ஏழைகளுக்கு உதவினார். இன்றைய காலத்தில் எதைச் செய்தாலும் விளம்பரத்தைத் தேடுபவர்களுக்கு மத்தியில் விளம்பரமே செய்யாமல் பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார் நெப்போலியன்.

தனது மகனின் திருமணத்தை நடத்தும்போது பலவிதமான சர்ச்சைகளையும் சந்தித்தார். இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு சரி என பட்டதைத் துணிச்சலாக செய்து முடித்து அவரது வாழ்க்கையில் ஒரு மகத்தான காரியத்தைச் செய்து விட்டார் என்றே சொல்லலாம். இவர் எட்டுப்பட்டி ராசா படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளார். கலைமாமணி பட்டத்தையும், எம்ஜிஆர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story