ஐயா உங்ககிட்ட நாங்க கேட்டது ஒரே ஒரு 'க்' தான? .. ட்ரோலுக்கு உள்ளான விஜய் கட்சியின் வைரல் போஸ்டர்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கராக வலம் வருபவர் விஜய். அப்பா எஸ்.ஏ.சி மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி காதல், ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர். ஒரு கட்டத்தில் மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.

இப்போது இவரின் ரசிகர் கூட்டம் மிகவும் பெரியது. தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், சினேகா, பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க: நடிகர் சங்கத்தை நம்பி மோசம் போன சேரன்! த்ரிஷாவுக்காக பேசி வீணாப் போச்சோ?

கடந்த சில வருடங்களாகவே விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியல் தொடர்பாக விவாதித்து வந்தார். எனவே, விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் ஒரு அரசியல் கட்சியை அவர் துவங்கினார்.

மேலும், 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என தெரிவித்திருக்கிறார். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒருபக்கம் வெற்றி கழகம் என்பதற்கு நடுவில் ‘க்’ வரும். எனவே, விஜயின் அரசியல் கட்சியின் பெயர் எழுத்துப்பிழையோடு இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்கிற பெயரில் அறிக்கைகள் வெளியானது. இந்நிலையில், தற்போது ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது. நாளிதழில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியான விளம்பர செய்தியில் ‘வாழ்த்துக்கிறோம்’ என எழுதி இருக்கிறார்கள். அதேபோல், வழிக்காட்டி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

poster

இந்த இரண்டு வார்த்தைகளிலுமே ‘க்’ வராது என்பதுதான் இலக்கணம். ஒன்று ‘க்’ இல்லாமல் போடுகிறார்கள். அல்லது. தேவையில்லாத இடத்தில் க்-ஐ பயன்படுத்துகிறார்கள் என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் நக்கலடித்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story