ஒரே ஒரு போட்டோ!.. ஒட்டுமொத்த விஜய் இமேஜும் க்ளோஸ்.. அமைதியா இருங்கடா அப்ரசண்டிகளா!..

நடிகர் விஜய் 2026ம் ஆண்டு கப்பு முக்கியம் பிகிலு என அரசியல் எதிர்காலம் குறித்து பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால், அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் அதற்கு பெரிய வேட்டாக வைத்து விடுவார்கள் என்றே தெரிகிறது.

மக்களுக்கு உதவ வேண்டும் என்று தான் நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு தனது விஜய் மக்கள் இயக்கத்தினரை மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு சிகிச்சை ஓவர்!.. மருத்துவமனை அப்டேட் இதோ!.. இதத்தான் எதிர்பார்த்தோம்!..

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஒன்றாக இணைந்து 10 லட்சம் ரூபாயை கொடுத்து அமீர் பிரச்சனையை அப்படியே ஆஃப் செய்து விட்டனர்.

வழக்கமாக நிதியுதவி வழங்கும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஏன் இன்னமும் வாயே திறக்கவில்லை என தொடர்ந்து பலரும் கேட்க ஆரம்பித்த நிலையில், விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை மீட்புப் பணிகளில் ஈடுபட சொல்லி அறிவிப்பு ஒன்றை மட்டும் வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: கையில கத்தி!.. மனசுல கெட்ட புத்தி.. நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுங்க கமல்.. கொதிக்கும் ரசிகர்கள்!..

இந்நிலையில், தளபதி சொல்லிட்டாரே என்றதும் அவரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என ஈசிஆர் சரவணன் முதியோர் இல்லத்தில் பசியால் அவதிப்பட்டு வரும் சில வயதானவர்களுக்கு உணவு வழங்கினார். அப்போது, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டு உணவு பரிமாறுவதற்கு முன்பாக இவர் தான் உங்களுக்கு உணவு அளித்து வருகிறார் என்பது போல விஜய் புகைப்படத்தை காட்டி வந்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியான நிலையில், ஏகப்பட்ட மீம்கள் வைலாகி வருகின்றன.

உங்களுக்கு உணவு கொடுப்பவர் உங்கள் விஜய் என ப்ளூ சட்டை மாறனும் இதுதான் நேரம் என நடிகர் விஜய்யை ட்ரோல் செய்துள்ளார். நல்லது பண்ணும் போது ஏன் இப்படி விளம்பரம் தேடி கெட்டப் பெயரை விஜய்க்கும் வாங்கி தரீங்க என ரசிகர்களே திட்டி வருகின்றனர்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it