தவெக தலைவர் விஜய் பற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘விஜய் முதலில் திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும்.. வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. குடும்பஸ்தனாக இருந்து அரசியல் நடத்த வேண்டும்’ என்று பேசியிருந்தார்.
இதற்கு அரசியலில் இருக்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
விஜயும், திரிஷாவும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. அவர்களிடையே நல்ல நட்பு உண்டு.. ஆனால் ‘சென்னை நீலாங்கரையில் விஜய் தனியாகவே வசித்து வருகிறார்.. கடந்த சில வருடங்களாகவே அவரின் குடும்பம் அவருடன் இல்லை.. விஜய்க்கும் அவரின் மனைவி குழந்தைகளுக்கும் சுமூகமான உறவு இல்லை.. அதனால் அவர்கள் லண்டனில் வசித்து வருகிறார்கள்.. விஜய் திரிஷாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்’ என திமுகவினரும், விஜயை பிடிக்காதவர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..
மேலும் திரிஷாவோடு விஜய் எடுத்துகொண்ட சில புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகும். தன்னை திரிஷாவோடு இணைத்து வரும் விமர்சனங்களுக்கு விஜயும் சரி, திரிஷாவும் சரி.. எப்போதும் பதில் சொன்னது இல்லை. இந்நிலையில்தான், இப்படி ஒரு கருத்தை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். லியோ படம் வெளியானபோது ஒரு பேட்டியில் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி பேசியதற்கு திரிஷாவுக்கு கோபத்தை ஏற்படுத்த டிவிட்டரில் மன்சூர் அலிகானை கடுமையாக திட்டி பதிவிட்டார். மேலும், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் மிரட்டியிருந்தார். எனவே, மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது..
தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இப்படி பேசியிருக்கிறார்.. ஆனால் இதுவரை திரிஷா தனது சமூகவலைத்தள பக்கங்களில் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.. இதையடுத்து ‘மன்சூர் அலிகான்னா ஈஸியா அடிப்பீங்க.. ஒரு கட்சித் தலைவர்னா அமைதியாக இருப்பீர்களா?’ என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…