1960களில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் மற்றும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கருவாக வைத்து சுதா கொங்கரா இயக்க்கியிருக்கும் திரைப்படம் பராசக்தி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான திரைப்படத்தின் தலைப்பை கொண்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இது அவரின் 100வது திரைப்படமாகும்.
இந்த படத்தில் இடம் பெற்ற பல காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிக்கவே அதையெல்லாம் படக்குழு மாற்றியது. ஒருவழியாக 25 மாற்றங்கள் செய்யப்பட்டு படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு, பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானது.

முதல் காட்சி வெளியானது முதலே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. அதில் பெரும்பாலானோர் படத்திற்கு நெகட்டிவ் கருத்துக்களை சொன்னார்கள். சூரரைப்போற்று அளவுக்கு படம் இருக்கும் என்று எதிர்பார்த்து உள்ளே போனோம்.. ஆனால் படத்தில் ஒன்றும் இல்லை.. படம் ஏமாற்றமாக இருந்தது.. ஜெயம் ரவியின் கதாபாத்திரம் மட்டும் நன்றாக இருந்தது..
அவர் மட்டுமே சிறப்பாக நடித்திருந்தார்.. ஜிவி பிரகாஷின் இசை நன்றாக இருந்தது. மற்றபடி படத்தில் ஒன்றுமில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர் ‘இந்த படத்தின் ஹீரோவே ஜெயம் ரவிதான்.. இன்னும் சொல்லப்போனால் ஜெயம்ரவி படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்’ என கலாய்த்திருக்கிறார்கள்.
