நம்புறது ஜோசியம்!. ஆனா டீசர்ல ‘உன்னை நம்பு’... விடாமுயற்சி டீமை வெளுக்கும் ரசிகர்கள்!..

by சிவா |
ajith
X

#image_title

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 10 மாதங்களுக்கும் மேல் உருவாகி வரும் திரைப்படம்தான் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பின் துவங்கப்பட்ட அஜித் படம் இது. அஜித்துக்கு ஜோடியாக திரிஷா, வில்லனாக அர்ஜூன் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதோடு, படத்தின் படப்பிடிப்பு அஜர் பைசான் நாட்டில் துவங்கியது.

படத்தின் கதையை இறுதி செய்யவே பல மாதங்கள் ஆனது. அதன்பின் ஒரு பழைய ஹாலிவுட் படத்தின் உரிமைய வாங்கி படமெடுக்க துவங்கினார்கள். கதைப்படி அஜர்பைசான் நாட்டுக்கு மனைவி திரிஷாவுடன் சுற்றுலா போகிறார் அஜித். அப்போது வில்லன் அர்ஜூனின் குரூப் திரிஷாவை கடத்துகிறது.

vidaamuyarchi

#image_title

அவர்களிடமிருந்து தனது மனைவியை அஜித் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பரபர ஆக்சன் மற்றும் கார் சேஸிங் கொண்ட திரைப்படமாக விடாமுயற்சி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் நடந்து வந்ததால் அஜித் ரசிகர்களே வெறுத்துபோய் இந்த படம் பற்றி அப்டேட்டை கேட்பதை நிறுத்திவிட்டனர்.

இந்த படம் மெதுவாக செல்லவே ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போனார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில்தான் இப்போது விடாமுயற்சி படத்தின் டீசர் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நேற்று இரவு 11.08 மணிக்கு டீசர் வீடியோ வெளியானது.

vidaamuyarchi

#image_title

அஜித் ஒரு சாய் பாபா பக்தர் என்பதால் அவரின் பட அறிவிப்புகள் மற்றும் படத்தின் ரிலீஸ் என எல்லாமே வியாழக் கிழமையாகவே இருக்கும். நேற்று வியாழக்கிழமை. அதோடு, வெளியான நேரம் 11.08. இதன் கூட்டுத்தொகை 10. நியூமராலஜி படி 10 என்பது அதிர்ஷடமான எண். இதை மனதில் வைத்தே நேற்று டீசர் வீடியோ வெளியாகியிருக்கிறது.

vidaamuyarchi

#image_title

இந்நிலையில், டீசர் வீடியோவில் ‘உன்னை நம்பு’ என வசனம் வருகிறது. இதைத் தொடர்ந்து ‘நம்புவது ஜோசியத்தை.. ஆனால், டீசரில் உன்னை நம்பு என வசனம்’ என சமூகவலைத்தளங்கள் விடாமுயற்சி டீமை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: தனுஷ் ரொம்ப பாசிட்டிவ் அண்ட் பவர்புல்!.. புது படம் பற்றி பேசும் அமரன் பட இயக்குனர்!….

Next Story