ஒரே அறையில் லேடி சூப்பர் ஸ்டாரான பெண் காவலர்!.. தலைவி பட நடிகைக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!..

தமிழில் தாம் தூம் படத்தில் நடித்து அறிமுகமான நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் நடிகையாக மாறி பல படங்களில் நடித்து அசத்தினார். குயின் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றார். ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் பயோபிக்கான மணிகர்ணிகா படத்தில் நடித்த கங்கனா ரனாவத் தமிழில் பல வருடங்களுக்குப் பிறகு ஜெயலலிதா பயோபிக்காக உருவான தலைவி படத்தில் நடித்திருந்தார்.
கங்கனா ரனாவத் பாஜகவுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு எதிராக ரசிகர்கள் திரண்டனர். அவர் நடித்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து இந்தியில் தோல்வியை தழுவிய நிலையில், தமிழில் எப்படியாவது வெற்றி கொடுத்து விடலாம் என நினைத்த அவருக்கு பாஜகவுக்கே தமிழ்நாட்டில் இடமில்லை பாஜக ஆதரவாளர் படத்துக்கா ஆதரவு கொடுப்போம் என ரசிகர்கள் இங்கேயும் கரியை பூசி விட்டனர்.
இதையும் படிங்க: ரசிகரை கைநீட்டி அடிக்க முயன்ற கே.எஸ்.ரவிகுமார்… அவ்ளோ கோபமா மனுஷனுக்கு..?
ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படம் தோல்வியை தழுவிய நிலையில், ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பி. வாசு இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த சந்திரமுகி 2 படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தளவுக்கு கொடுமையான படத்தை கொடுத்து சந்திரமுகி படத்தையே அசிங்கப்படுத்தி விட்டதாக ரசிகர்கள் கங்கனாவை கழுவி ஊற்றினர்.
சினிமாவில் அடிவாங்கிய கங்கனா ரனாவத் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து நட்சத்திர பேச்சாளராக மாறிய நிலையில், விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகளாக சித்தரித்து பேசியது கடும் எதிர்ப்புகளை கொடுத்தது.
இதையும் படிங்க: மொத்த பட்டனையும் கழட்டி அழகை காட்டும் ராஷ்மிகா மந்தனா!.. சும்மா அள்ளுது!..
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்பியான கங்கனா ரனாவத் வந்தபோது அங்கே பாதுகாப்பு படையில் இருந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தது தேசியளவில் டிரெண்டாகி வருகிறது.
நெட்டிசன்கள் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அடித்த காவலரை லேடி சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். ஆனால், நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனாவை பொது இடத்தில் கன்னத்தில் அடித்த பாதுகாவலருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என பாஜகவினர் கொந்தளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்கி 2898 AD-க்கு வந்த சிக்கல்!.. உதயநிதியை காட்டிய கமல்!.. என்ன நடக்கப் போகுதோ!..