Connect with us
danush

Cinema News

போஸ்டரிலே இவ்வளவு குழப்பமா?!. சரியா வருமா இளையராஜா பயோபிக்?.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் இசைக்கடவுளாக இருந்தவர் இளையராஜா. மதுரை பண்ணபுரத்திலிருந்து சென்னை புறப்பட்டு வந்து இசையமைப்பாளராக மாறி 80,90களில் திரைப்படங்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக இருந்தவர் இவர். இளையராஜா இசைக்காகவே படங்கள் வியாபாரம் ஆகும்.

அவரின் இசை என்றாலே ரசிகர்கள் தியேட்டருக்கு போவார்கள். ஒரு மொக்கை படம் கூட இளையராஜாவின் இசையால் தப்பித்து ஓரளவுக்கு ஓடி தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று கொடுத்துவிடும். அதேபோல், வசனங்களில் இயக்குனர் சொல்ல முடியாமல் போன விஷயங்களை கூட இளையராஜா தனது பின்னணி இசையில் சொல்லிவிடுவார்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா?!.. 20 கோடிக்காக தயாரிப்பாளரை மாற்றிய ஏகே…

திரைவாழ்வில் அவர் கடந்து வந்தது ஏராளம். இப்போது அவரின் வாழ்க்கையை படமாக எடுக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சாணி காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

poster

இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இதில் இளையராஜா, பாரதிராஜா, கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், இசைஞானியின் கதையை எடுக்க அருண் மாதேஸ்வரன் சரியாக இருப்பாரா? என நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏனெனில், அவரோ வெட்டு குத்து, துப்பாக்கி, ரத்தம் என ஆக்சன் படங்களை இயக்கி வருபவர். அவர் எப்படி ராஜாவின் பயோபிக்கை சரியாக எடுப்பார் என பலரும் கேட்கிறார்கள்.

இதையும் படிங்க: தக் லைஃப் படத்தில் கமலுக்கு மூன்று வேடமா? ஆனா அவரு ஒண்ணுமே சொல்லலையே!..

மேலும், போஸ்டரில் தனுஷ் கதாபாத்திரம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நிற்பது போல காட்சி இருக்கிறது. பண்ணைபுரத்தில் இருந்து வருபவர்கள் எக்மோர் நிலையத்துக்குதான் வருவார்கள். அதோடு, இளையராஜா தனியாக வரவில்லை. அவரின் சகோதரர்கள் கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரும் வந்தனர். எனவே, போஸ்டரே தப்பு’ என சிலர் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இதையெல்ல்லாம் மீறி இளையராஜாவின் கதையை எப்படி சரியாக சொல்லபோகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top