Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார். இனிமேல் அவரின் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் டி இமான் கொடுத்த பேட்டி ரசிகர்கள் வட்டாரத்திலும், திரையுலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிவகார்த்திகேயன் வளரும் நேரத்தில் அவரின் படங்களுக்கு இசையமைத்து அந்த பாடல்கள் மூலம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சென்றவர்தான் இமான். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்தார். இந்த எல்லா படங்களிலுமே பாடல்கள் சூப்பர் ஹிட்.
இதையும் படிங்க: பிக்பாஸ்ல இருந்து வெளியே வந்ததும் சிவகார்த்திகேயன் என்கிட்ட சொன்னது! சீக்ரெட்டை உடைத்த தினேஷ்
இருவரும் அண்ணன் – தம்பிகளாகவே பழகினார்கள். திடிரென சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைப்பதை இமான் நிறுத்திவிட்டார். சிவகார்த்திகேயனும் அனிருத் பக்கம் போய்விட்டார். சிவகார்த்திகேயன் செய்த வேலையில் மனம் உடைந்த இமான் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சினிமா பத்திரிக்கையாளர்கள் நாசுக்காக சொல்லி வந்தனர்.
இமான் கொடுத்த பேட்டி மூலம் சிவகார்த்திகேயனால்தான் இமான் மனைவியை பிரிந்தாரா என்கிற சந்தேகமும் பலருக்கும் எழுந்தது. இமான் அவ்வளவு சொல்லியும் சிவகார்த்திகேயன் அது பற்றி எங்கும் பேசவில்லை. அதுபற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதோடு, தனது இணைய கூலிகள் மூலம் இமான் விவகாரம் டிரெண்டிங் ஆகாமலும் பார்த்துக்கொண்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் ‘இமானை அண்ணன் என்றே கூப்பிடுவேன். அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக மாறிவிட்டேன். இமானின் மனைவியை அண்ணி அண்ணி என்றே அழைப்பேன். என் கொழுந்தனாரே என்னை டார்ச்சர் பண்றீங்க என செல்லமாக கோபப்படுவார். அவரின் குழந்தை என்னை சித்தப்பா என்றுதான் கூப்பிடுவாள். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு’ என பேசியிருந்தார்.இந்த வீடியோவை கட் செய்து செய்து இப்போது நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
https://twitter.com/Yuvaraj07309839/status/1754093134341083422?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1754093134341083422%7Ctwgr%5E0eb9022c5d0cda351cae7e32bc65e5f309d5c4e8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Fsivakarthikeyan-relationship-with-imman%2F