கேக் சைஸ் கூட பெரிசா இல்லையே!.. இதுதான் கிராண்ட் சக்சஸா?.. அமுல் பேபியை அழவிடும் நெட்டிசன்கள்!..

போர் தொழில் படம் வெற்றி அடைந்த நிலையில் தொடர்ந்து சரத்குமாருக்கு ஏகப்பட்ட படங்கள் கிடைத்து வருகின்றன. அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தொழில் திரைப்படம் இந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
குறைந்த பட்ஜெட்டில் வெளியான இந்த படம் 50 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி வசூல் சாதனை செய்தது. நடிகர் சரத்குமார் தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் இளம் ஹீரோக்களுடன் நடித்து வரும் நிலையில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்த அமுல் பேபி என அந்தப் படத்திலேயே கிண்டல் செய்யப்பட்ட அமிதாஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியான பரம்பொருள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்து திடீர் மரணம்… இன்னும் எத்தன பேர காவு வாங்குமோ!…
பரம்பொருள் திரைப்படம் ரிலீஸ் ஆனதே தெரியவில்லையே என்றும் கிராண்ட் சக்சஸ் என சொல்லிவிட்டு சின்ன சைஸ் கேக்கை வெட்டுகிறார்களே என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிப்பில் வெளியான மாயோன் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் வரை போட்டு துவைக்க பட்ட சிலை கடத்தல் கதையை மையமாக வைத்து இந்தப் பரம் பொருள் படம் உருவானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அப்போ சினிமால உருப்புடுறது கஷ்டம்தான்!.. பால் நடிகை முதல் ஆனந்த நடிகை வரை அனுபவித்த வாரிசு நடிகர்!..
போர் தொழில் படத்தைப் போலவே அமிதாஷ் உடன் சரத்குமார் இணைந்து நடித்த நிலையில் இந்தப் படமும் இருக்கும் என புரோமோஷன் செய்தும் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் ஆகிவிட்டது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்