latest news

ராமராஜனை பார்த்தாவது திருந்துங்க – விஜயை விளாசும் நெட்டீசன்கள்

திரைத்துறையில் விவாகரத்து என்பது சாதாரண விசயமாகவே மாறிவிட்டது. சிறு சண்டை என்றாலேஎ நீதிமன்றத்தை நாடி விடுகின்றனர். ராமராஜன்,கமல்ஹாசன், பார்த்திபன், பிரபுதேவா, தனுஷ், ஜி.வி.பிரகாஷ் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களது மனைவியை விட்டு பிர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் மனைவியை பிரிந்தாலும் எந்த இடத்திலும் மனைவியை பொதுவெளியில் குரைகூறவில்லை அல்லது அவர்களது மனம் காயப்படும் அளவில் நடந்துகொள்ளவும் இல்லை.

ஆனால் நடிகர் விஜய்யின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாகவே தெரிகிறது. ஒருபுறம் விஜய் மனைவி சங்கீதா , தனது கணவர் திருமணத்தை மீறிய உறவில் உல்ளார். இதனை கைவிட வேண்டும் என்று கூறியும் அவ்ர் கண்டுகொள்ளவேயில்லை என்றும் நீதிமன்ற புகாரில் கூறியுள்ளார். இது கடந்த வாரம் முதலே தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்பியது. அப்படியெல்லாம் இல்லை என்ற நிலையிலேயே விஜய் தொண்டர்கள் அவருக்கு முட்டு கொடுத்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற திருமண விழாவிற்கு விஜய் திரிஷாவுடன் ஜோடியாக வந்து போஸ் கொடுத்த சம்பவம் எரிகிற நெருப்பில் எண்ணெய ஊற்றியது போல ஆயிற்று. விஜயின் இந்த செயலை அவரது கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி திரைபிரபலங்கள் கூட வசை பாடியுள்ளனர்.
விஜய்யின் இந்த அலட்சியமான போக்கு, நாம் எதைச் செய்தாலும் கைதட்டி ரசிக்க ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற அவரது நம்பிக்கையையே காட்டுவதாகப் பலரும் விமர்சிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் விஜயை ராமராஜனுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

ராமராஜன் – நளினி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுகொண்டிருந்த நேரத்தில் ஒரு செய்தியாளர் நளினியைப் பற்றி ராமராஜனிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர், என் மனைவியைப் பற்றி உங்களிடம் பேசுவது நாகரிகமாக இருக்காது என்று கூறி சென்றார். விவாகரத்து தீர்ப்பு வந்த நாளில் அதே செய்தியாளர் மீண்டும் கேட்க, இப்போது அவருக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இன்னொரு வீட்டுப் பெண்ணைப் பற்றி நான் பேசுவது முறையாக இருக்காது என்று கண்ணியமாகப் பதிலளித்து சென்றார் ராமராஜன். ஆனால் விஜய் வேண்டுமென்றே இந்த செயலை செய்துள்ளதாகவே தெரிகிறது. ராமராஜனை செயலை பார்த்தாவது விஜய் திருந்த வேண்டும். பாஒருவர் தனது கேரியரின் உச்சத்தில் இருக்கலாம், ஆயிரம் கோடி சம்பாதிக்கலாம்; ஆனால் அவை எவையுமே பெரிய சாதனைகள் அல்ல. தனது குடும்பத்தையும், தனக்குத் துணையாக இருந்த பெண்ணையும் எந்த ஆண் கண்ணியமாக மதிக்கிறானோ, அவனே உண்மையான மனிதன் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

55 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago