அவங்களாம் இல்ல.. புது ’தக்’ இவரு தான்.. புதிய அறிவிப்பை வெளிட்ட தக் லைஃப் படக்குழு!...

by Akhilan |
அவங்களாம் இல்ல.. புது ’தக்’ இவரு தான்.. புதிய அறிவிப்பை வெளிட்ட தக் லைஃப் படக்குழு!...
X

ThugLife: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பில் பல சுவாரஸ்ய விஷயங்களை கொடுத்து இருக்கிறது படக்குழு. இது தான் தற்போதைய சமூக வலைத்தள ட்ரெண்ட்டாகவும் மாறி இருக்கிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா, சிலம்பரசன் நடிப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. முதலில் இப்படத்தின் அறிவிப்பு வந்த போது துல்கர் சல்மான், ஜெயம் ரவி என இருவருமே நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையும் படிங்க: ஈஸ்வரிக்கிட்ட ஒருவழியா விஷயத்தினை உடைச்சிட்டாரே கோபி… இனியாவது கதைய மாத்துங்கப்பா…

ஆனால் துல்கர் தன்னுடைய கால்ஷூட் பிரச்னையால் அந்த படத்தில் இருந்து விலகினார். அவர் கேரக்டரில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. அவருடன் இருந்த பிரச்னையாலும், நிறைய படங்களின் கால்ஷூட் கோளாறாலும் தக் லைஃபில் இருந்து விலகினார். இருவரையும் மீண்டும் படத்திற்கு அழைத்து வருவதாக கூறப்பட்டாலும் இன்று வெளியாகி இருக்கும் புதிய அறிவிப்பில் ஜெயம் ரவி, துல்கர் சல்மானின் பெயர்கள் இல்லாமல் இருக்கிறது.

இதனால் அவர்கள் இந்த படத்தில் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு புது டெல்லியில் நடந்து வருகிறது. சிம்பு மற்றும் அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். நேற்று சிம்பு நடித்த காட்சியின் புகைப்படம் லீக்காகி வைரலானது. இதில் காளை பட கெட்டப்பில் சிம்புவும், சத்யா கெட்டப்பில் கமல்ஹாசனும் இருந்தனர்.

இதையும் படிங்க : காசுக்கு ஆசைப்பட்டு கோட்டை விட்ட கரண்!.. கடைசியா விக்ரம் நடிச்சு சூப்பர் ஹிட்டான படம் எது தெரியுமா?

தற்போது சிம்புவின் எண்ட்ரி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நாளை காலை 10 மணிக்கு வெளியிட இருக்கிறது. அதன் முன்னோட்டமாக இன்று வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில் ஸிக்மா தக் லைஃப்(STR) என்ற அறிவிப்புடன் இனி புதுசா தொடங்கலாம். நாளை புது தக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கமலை போல சிம்புவின் கெட்டப்புடன் வீடியோ வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிலம்பரசனின் வீடியோவைக் காண: https://twitter.com/RKFI/status/1787716607638184400

Next Story