ஹே.. அண்ணன் வரார் வழிவிடு… தவெக கழக தலைவர் வெளியிட்டதை கவனிச்சீங்களா?
தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் சார்பாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். ஒவ்வொரு திரைப்படத்தின் வருமானமும் 600 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கோட் திரைப்படத்தின் வசூல் ஆயிரம் கோடியை கூட தொடும் என பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க: அந்த படம் பிரசாந்துக்கு சொன்னது… மொக்க காரணத்தால் மிஸ்ஸான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்..
பொதுவாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் பல நடிகர்கள் தங்கள் மார்க்கெட் மொத்தமாக முடிந்த பின்னரே உள்ளே வருவார்கள். ஆனால் எம்ஜிஆர் பின்னர் கோலிவுட்டின் உச்சத்தில் இருக்கும் விஜய் நடிப்பில் இருந்து மொத்தமாக விலகி அரசியலுக்குள் வர இருக்கிறார்.
இது பலருக்கு ஆச்சரியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. தன்னுடைய அரசியல் கட்சியை தமிழக வெற்றிக்கழகம் என அறிவித்தார். அதன் பின்னர் முக்கிய நிகழ்வுகளுக்காக அறிக்கையை தலைவராக வெளியிட்டார். கட்சிக்கான பிரத்யேக ஆப்பும் வெளியிடப்பட்டது.
இருந்தும் தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துவிட்டு தான் வருவேன் என அவர் கூறிக்கொண்டது போல கோட் திரைப்படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் பதித்திருந்தார். தற்போது அப்படத்தின் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் கட்சிப் பணிகளில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் முதல் நிகழ்வான கொடி அறிமுகம் குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.
அந்த அறிக்கையில், நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.
இதையும் படிங்க :அவார்டு படம் எடுக்கணும்னு இப்படியா எடுப்பீங்க… கொட்டுக்காளியா… கொட்டும் காளியா?
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு நாளை 22.08.2024 காலை 9.15 மணியளவில் தலைமை நிலையச் செயலகம், பனையூர், சென்னை 600119ல் நடைபெறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பும் நாளை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.