20 வருடம் கழித்து விஜயுடன் கூட்டணி போடும் நடிகர்!.. தளபதி 68 அப்டேட்..
கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு படத்திற்கு பிறகு பழைய வேகத்தில் சினிமாவில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய். இதற்கு முன்பெல்லாம் வருடத்திற்கு இரண்டு படங்களாவது கொடுத்துவிடுவார் விஜய். ஆனால் போக போக நடிகர் விஜய் படங்கள் வருடத்திற்கு ஒரு படம் என வர துவங்கின.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க துவங்கியுள்ளார் விஜய். வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும்போதே அடுத்து லியோ படத்தில் கமிட் ஆனார் விஜய்.
இதையும் படிங்க:சூர்யா படத்தில் நீங்கிய நடிகையை ஜெயம் ரவி படத்தில் சேர்த்த இயக்குனர்!.. நடிகைக்கு மார்க்கெட் அப்படி!..
லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தளபதி ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக வெகுவாக காத்துக்கொண்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் விஜய் பாடிய பாடலான நான் ரெடிதான் வரவா பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கமிட் ஆகும் புது நடிகர்:
இதற்கிடையே அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தின் கதைக்கான வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்று முடிவு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க:அரவிந்த்சாமிக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த நடிகை! அண்ணன் மவுசு தெரிஞ்சும் யாருப்பா அந்த நடிகை?
ஆனால் முதல் கட்டமாக நடிகர் ஜெய்யை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். முதன் முதலாக பகவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெய். அதில் விஜய்யின் தம்பியாக நடித்திருப்பார் ஜெய்.
அதன் பிறகு 20 வருடம் கழித்து மீண்டும் தளபதி படத்தில் ஜெய் கமிட் ஆகி இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பா ரஞ்சித்தை திட்டிய துஷாரா விஜயன் !.. வாய்ப்பு கொடுக்க வந்தவரை இப்படி வசைபாடலாமா..??