பிரபல நடிகையின் காருக்குள் அத்துமீறி நுழைந்த நபர்.. அலறி துடித்த நடிகை....!
சமீபகாலமாகவே நடிகைகள் மீதான அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. அதாவது சோசியல் மீடியா பக்கங்களில் நடிகைககளிடம் ஆபாசமான கேள்விகளை கேட்பது மற்றும் அவர்களை நேரில் சந்தித்தால் புகைப்படம் எடுப்பது போல் அவர்களிடம் எல்லை மீறுவது போன்ற செயல்கள் அதிகளவில் நடந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு நடிகையின் காரில் அனுமதி இன்றி ஒரு நபர் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகை வேறு யாருமல்ல விஜய்யின் குஷி படத்தில் அவருடன் இணைந்து குத்தாட்டம் போட்ட நடிகை ஷில்பா ஷெட்டி தான்.
பாலிவுட்டில் பிரபல நடிகையான இவர் தொழில் அதிபர் ராஷ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்த தம்பதிகளுக்கு ஷமிஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மும்பை ஜூஹு பகுதிக்கு காரில் தனது மகளுடன் சென்றுள்ளார்.
பின்னர் விழா முடிந்து வீட்டுக்கு திரும்ப தனது காரில் ஷில்பா ஷெட்டி ஏறியபோது வாலிபர் ஒருவர் ஷில்பா ஷெட்டியின் காருக்குள் அத்துமீறி ஏறி உட்கார்ந்தார். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த ஷில்பா ஷெட்டி அந்த வாலிபரை கீழே இறங்கும்படி கூறியுள்ளார்.
ஆனால் அவர் இறங்காததால், ஷில்பா ஷெட்டி கத்தி கூச்சல் போடவே அருகில் இருந்த பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை காரில் இருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சற்று பதற்றம் நிலவியது.