குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு இத்தனை கெட்டப்பா?!.. தல தெறிக்கவிடுவாரே!...
Good Bad Ugly: விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் ஒரு முக்கிய விஷயத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது ரசிகர்களிடம் ஹிட் கொடுக்குமா காலை வாருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பைக் ரேஸ்சில் பிஸியாக இருந்த அஜித் கடந்த சில மாதங்களாக தான் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். ஆனால், அஜர்பைஜானில் கால சூழ்நிலையால் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனது. இன்னும் படத்தின் பெருவாரியான காட்சிகள் படமாக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இதையும் படிங்க: குழப்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் விஜய்! தளபதி 69 அவ்ளோதானா?
ஆனால் அஜித் விடாமுயற்சி திரைப்படத்திற்கு கொடுத்த கால்ஷீட் பிப்ரவரியுடன் முடிந்து விட்டதாம். ஏற்கனவே அஜித் இன்னும் தேதிகளை தர முடியாது என கறார் காட்டிய நிலையில் அவரின் அடுத்த படமாக குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வெளியானது.
இதனால் தற்போது ஒரே நேரத்தில் அஜித் இரு படங்களுக்கும் தேதியை ஒதுக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்துவிட்டதாம். படக்குழு ஷூட்டிங்கிற்கும் தயாராகி விட்டதாம்.
இதையும் படிங்க: புறநானூறுக்கு வச்சாச்சு ஃபுல் ஸ்டாப்! கோலிவுட்டுக்கு டாட்டா.. வெளியான சூர்யாவின் உண்மையான முகம்
இப்படத்தில் மார்க் ஆண்டனி ஹிட்டுக்கு முக்கிய காரணமான எஸ்.ஜே.சூர்யா இணைந்து இருக்கிறார். இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய தகவலின்படி அஜித் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். இப்படம் அஜித்தின் கேரியரிலிருந்து மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சமீபத்திய காலமாக அஜித் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் சீரியஸ் டோனில் இருந்தது. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக அமையும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே வரலாறு திரைப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.