ஒன்னுக்கே கஷ்டம்… இதுல ரெண்டா… அந்த படத்தால் கடுப்பில் இருக்கும் நடிகர் சூர்யா…

by Akhilan |
ஒன்னுக்கே கஷ்டம்… இதுல ரெண்டா… அந்த படத்தால் கடுப்பில் இருக்கும் நடிகர் சூர்யா…
X

Surya: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புறநானூறு படத்தில் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரிய விஷயத்தினை இயக்குனர் கையாள முடிவெடுத்து இருக்கிறாராம். ஏற்கனவே சூர்யா கால்ஷூட் பிரச்னை இருக்கும் நேரத்தில் இதுவேறையா என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.

தமிழில் இரண்டு வருடங்களாகவே சூர்யா நடிப்பில் எந்த படங்களும் ரிலீஸாகவே இல்லை. கடைசியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருப்பார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் கமலின் விக்ரமில் ஒரு சின்ன வேடத்தில் வந்து ஹிட்டடித்தார்.

இதையும் படிங்க: பாய்ஸ் படத்தில் ஜெனிலியா கேரக்டர் நான் தான் செஞ்சிருக்கணும்… ஆனா.. ரகசியம் சொன்ன வாரிசு நடிகை…

இதையடுத்து தமிழில் கங்குவா படத்தினை முடித்து விட்டார். அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இதையடுத்து சூர்யா பாலிவுட்டில் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் மகாபாரத கதையில் நடிக்க இருக்கிறாராம். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் ஒப்புக்கொண்ட வாடிவாசல் திரைப்படமும் தயாராகும் நிலைக்கு வந்துவிட்டது. இது ஒருபுறமிருக்க சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தின் ஷூட்டிங்கும் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறதாம். சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: இப்போதான் இது மணிரத்னம் படம்! சிம்புவை தொடர்ந்து ‘தக் லைஃபில்’ இணைந்த ஹேண்ட்ஸமான அந்த ஹீரோ

சூர்யாவுடன், துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரியாடிக் படமாக உருவாக இருப்பதால் ஷூட்டிங்கிற்கு முன் சில பணிகள் இருப்பதால் கொஞ்சம் தள்ளிப்போவதாக சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைந்து சமீபத்தில் அறிவித்தனர்.

இப்படத்தின் பிரி புரோடக்‌ஷன் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறதாம். அதுவும் படத்தின் தாமததுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இருக்கும் கதையை அப்படியே எடுத்தால் 3 மணி நேரத்தில் சொல்ல முடியாது என்பதால் இரண்டு பாகமாக எடுக்கும் திட்டமும் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story