ஒரு சீன் கூட இந்தியாவில் எடுக்க கூடாது!.. கண்டிஷன் போட்ட அஜித்.. விடாமுயற்சி செம அப்டேட் வந்துருச்சி!..

Published on: July 28, 2023
ajith
---Advertisement---

அஜித் ரசிகர்கள் பல நாட்களாக விடாமுயற்ச்சி படத்தின் அப்டேட்டுக்கு காத்திருக்கிறார்கள். விஜயின் லியோ படம் விரைவில் வெளியாகப்போகிறது. ஆனால் அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. அஜித்தின் அடுத்த படத்தை மகிழ்திருமேனி இயக்கப்போகிறார். இந்த படத்தின் பெயர் விடாமுயற்சி என்று பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.

ajith

ஆனால் இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. விடாமுயற்சி படம் வெளியாகுமா? படப்பிடிப்பு தொடங்குமா? எதேனும் அப்டேட் ஆவது வெளியாகுமா? என்று ஏக்கமாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் 2வது வாரம் தொடங்கும் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ajith

மேலும் ஒரு சீன் கூட இந்தியாவில் எடுக்கக்கூடாது, எல்லாமே வெளிநாட்டில் தான் எடுக்க வேண்டும் என்று அஜித் உறுதியாக கூறிவிட்டார். எனவே முழு படப்பிடிப்பும் வெளிநாட்டில் தான் இருக்கும். ஒரே கட்டமாக படத்தை எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்டு மாதம் 2வது வாரம் தொடங்கும் படப்பிடிப்பு, 40 நாட்கள் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.

முடிந்தவரை பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிடவேண்டும் என்ற முனைப்போடு, படக்குழுவினர் படப்பிடிப்பிற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த படத்தில் தமன்னா தான் ஹீரோயின்.  இந்த படத்தின் கதை ஹீரோவை மையமாக கொண்டது என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.