Connect with us
kamal

latest news

பிக்கி பாய்க்கே டஃப் கொடுப்பாரே இவரு! பிக்பாஸ் 7 சீசனில் முதல் ஆளாக களமிறங்கிய அந்த போட்டியாளர்

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையும் பல முயற்சிகளை எடுத்து வெற்றி கண்டு வருகின்றது. சின்னத்திரை என்றாலே ஒரே சீரியல் தான் என்ற நிலைமை சமீபகாலமாக மாறிவருகின்றது. படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இப்போது சின்னத்திரைக்குள் நுழைந்து வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்  நிகழ்ச்சி. விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். ஆறு சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைக்கக் காத்துக் கொண்டிருக்கின்றது.

இதையும் படிங்க : இந்த படத்துக்கும் இரண்டாம் பாகமா? ஜெயம் ரவிக்காக அண்ணன் ரவி போடும் ப்ளான்!

வரும் அக்டோபர் மாதம் இறுதியில் பிக்பாஸ் 7வது சீசனுக்காக வேலைகள் மும்முரமாக ஆரம்பமாக இருக்கின்றது என கூறுகிறார்கள். அதற்கான செட் வேலைகள் தான் இப்போது  நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீசனுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்வதில் வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கெனவே நடிகர் அப்பாஸ் தன்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல் என்னை அழைத்தார் என்று ஒரு பேட்டியில் கூறினார்.

ranjith

ranjith

அதனால் இந்த சீசனில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. அதுவும் போக நியுஸிலாந்தில் இருந்த அப்பாஸ் சமீபகாலமாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேட்டியும் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : நடிகருடன் காதல், கல்யாணம் , அபார்ஷன்! பல தடைகளை தாண்டி ‘ஜெய்லர்’ படத்தில் கெத்து காட்டிய நாயகி

மேலும் பிரபல செய்தி வாசிப்பாளரான ரஞ்சித் பெயர்தான் அடிக்கடி இந்த சீசனில் அடிபட்டு வருகின்றது. பிக்பாஸ் 7 சீசன் என்று சொன்னதும் ரஞ்சித் பெயரைத்தான் அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு ஏற்ற வகையில் பிரபல செய்தி நிறுவனத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்புதான் ரஞ்சித் விலகினார். அதனால் பிக்பாஸில் கலந்து கொள்வதற்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்றும் கூறிவருகிறார்கள்.

செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்துக்கு சிறப்பம்சமே அவருடைய வாய்ஸ்தான். அதனால் இவர் பிக்பாஸுக்குள் வந்தால் பிக்பாஸுக்கே டஃப் கொடுத்து பேசக்கூடிய போட்டியாளராகத்தான் இருப்பார் என்று கூறுகிறார்கள்.

google news
Continue Reading

More in latest news

To Top