எம்மா ஒத்த ரோசா புள்ளைய நல்லா வளத்துருக்க! என்ன உள்ள விட்டா காலி பண்ணிடுவேன் - ஜோவிகா குறித்து பிரபலம் பகீர்

by Rohini |
jovika
X

jovika

Jovika BiggBoss: சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றித்தான். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் பிரபலமானாலும் அதே அளவுக்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் வெறுப்பையும் சம்பாதித்து வருகின்றனர்.

கடந்த ஆறு சீசன்களில் இந்தளவுக்கு எந்த போட்டியாளர்களும் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தது இல்லை. புல்லிங் கேங்க் என்ற பெயரையும் வாங்கிக் கொண்டனர். இப்படியும் பெண்கள் இருப்பார்களா? என்றளவுக்கு யோசிக்க வைத்துவிட்டார்கள்.

இதையும் படிங்க: சந்திரமுகி 2 எஃபெக்ட்!.. முதல் நாளில் கல்லா கட்டாத ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. வசூல் இவ்ளோ தானா?..

அதிலும் குறிப்பாக சின்னக் குழந்தை ஜோவிகாவின் பேச்சு வெறுப்பை ஏற்படுத்துவதாகவே அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. இவ்வளவு சின்ன வயதிலேயே இந்தளவுக்கு யோசிக்கிறாரே என்று ஒரு பக்கம் ஆச்சரியப்பட்டாலும் வயதுக்கு மரியாதை கொடுக்க தெரியாத பெண்ணாக இருப்பதுதான் ஜோவிகாவின் மீதுள்ள கோபமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருகப்பவர் ரஞ்சித். இவரின் மனைவியும் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான். இவர்தான் இப்போது ஜோவிகா குறித்து காரசாரமான பேட்டியை கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: உயிருள்ளவரை உஷா கங்கா காலமானார்.. திரையுலகினரை துரத்தும் மாரடைப்பு பிரச்சனை.. பிரபலங்கள் இரங்கல்

அதாவது ‘ரவீனா உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளரையும் மம்மி, அண்ணா, என உறவுக்கு பேர் கொடுத்து மரியாதையா பேசுறாங்க.அவங்க வயசுக்கு ஏத்த போட்டியாளர்களை மட்டும்தான் பேர் சொல்லி பேசுறாங்க. ஆனால் ஜோவிகா வீட்டுல யாரும் அப்படி வளர்க்கல போலிருக்கு.’

‘இப்போ விச்சுலாம் கிடையாது. நேராக விசித்ராதான். எவ்ளோ பெரிய சீனியர் அவங்க? எனக்கு மட்டும் ஈவிபி கேட்ட திறந்து விட்டாங்கனா உள்ளே போய் ஒவ்வொருத்தரையும் கிழிச்சு தொங்கவிட்டுருவேன்.மாயாவ வா போனு தான் பேசுவேன். அப்படித்தான் இருப்பேனு பேசுறீல? அப்போ மரியாதையும் தெரிஞ்சிருக்கனும்.’

இதையும் படிங்க: விஜய்க்கு ஷாருக்கான் செய்து கொடுத்த சத்தியம்!.. ஜவான் உருவானபோது இவ்வளவு நடந்துச்சா!..

‘ஜோவிகா வாய மூடிட்டு போடினு சொன்னா உனக்கு எப்படி இருக்கும்? ஆனால் நீ எத்தன தடவ டீ போட்டு பேசுற? உன்ன ஒருத்தர் கலாய்க்கும் போது கோவம் வருதுனா நீ கேங்கா வந்து கலாய்க்கும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும்? ’வளர்ப்பு சரியில்லங்க என ரஞ்சித் மனைவி ஜோவிகா மீது ஆத்திரத்தில் அந்த பேட்டியின் போது கொட்டி தீர்த்துவிட்டார்.

Next Story