நெல்சனை கண்டு பதறும் தலைவர் ஃபேன்ஸ்.! பரபரக்கும் மீம்ஸ்.!

கோலமாவு கோகிலா , டாக்டர் போன்ற படங்களை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி கடந்த 13ஆம் தேதி திரைக்கு வந்த படம் பீஸ்ட். சன் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
இந்த பீஸ்ட் திரைபடத்தின் ட்ரைலர்ரில் கொடுத்த காட்சிகள் ரசிகர்களின் மனதில் பெரும் எதிர்பார்ப்பாய் உண்டாக்கியது . ஆனால், வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனதால் விஜய் சிகர்களுக்கு இப்படம் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது.
நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க இருக்கிறார். பீஸ்ட் ரிசல்ட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் சற்று கலக்கத்தில் தான் உள்ளனர். இதை கேலி செய்யும் விதமாகவும் , பீஸ்ட் படத்தின் ஏமாற்றத்தையும் கொண்டு சமூக வலைத்தளத்தில் நெட்டிசென்களும், மீம் கிரேட்டர்ஸ்களும் மீம்ஸ் மற்றும் கருத்துகளை அதிகமாக பதிவு செய்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன் - அஜித் இன்னும் அத மாத்திக்கவே இல்ல.! அந்த நடிகை கூறிய ரகசிய தகவல்.!
ரஜினி நடிக்க உள்ள அவரது 169திரைப்படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இப்பட ஷூட்டிங் ஜூன் , ஜூலையில் நடைபெறும் என கூறப்படுகிறது. அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.