Connect with us
kamal

Biggboss Tamil 7

அடுத்த ரெட்கார்டு ரெடி! கமல் இதுக்கு பதில் சொல்லியே ஆகனும் – தாங்கமுடியாத bully gang அடாவடி

Biggboss Season7: இதுவரை இல்லாத வகையில் பிக்பாஸின் இந்த சீசன் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு வெறுப்பையும் சம்பாதித்து வருகிறது. புல்லி கேங்காக சுற்றி வரும் மாயா, ஐஸ்வர்யா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்‌ஷன், ரவீனா,மணி போன்றோர் தாங்க முடியாத அடாவடிகளை பிக்பாஸ் வீட்டிற்குள் செய்துவருகின்றனர்.

இதில் இந்த வார கேப்டனாக மாயா பொறுப்பேற்றிருக்க ஒரு கேப்டனாக அதிகாரம் பண்ணத்தான் செய்வேன் என்று மிகவும் திமிராக சின்ன வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை ஒரு அடிமை மாதிரி நடத்துவது போல தெரிகிறது.

   

இதையும் படிங்க: ஒத்த வார்த்தைல ரஜினியை கடுப்பாக்கிய லாரன்ஸ்.. அதிகமா பேசினா இப்படித்தான் நடக்கும்!..

பெண்கள் பாதுகாப்புக்கு என சொல்லிவிட்டு பிரதீப்பை வெளியேற்றி விட்டு அவருக்கு அடுத்த படியாக மாயா இந்த வீட்டை ராஜாங்கம் செய்கிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது.  அவர் நடந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் பார்க்கும் ரசிகர்களை வெறுப்படைய வைக்கிறது. இப்படியும் ஒரு பொண்ணு இருக்க முடியுமா? என்ற எண்ணத்தை வரவழைக்கிறது.

என்னதால் இது மாயாவின் வியூகமாக இருந்தாலும் ரசிகர்களையும் கொஞ்சம் திருப்திபடுத்த வேண்டும். வந்த முதல் நாளில் அழுது கொண்டே ரசிகர்களை சம்பாதித்த அர்ச்சனா நேற்றிலிருந்து ஒரு பூகம்பமாக மாறி வீட்டையே ஒத்த ஆளாக சமாளித்துக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: பசங்க நிலைமை ஐயோ பாவம்!.. பாதி பனியனை கிழிச்சி தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா…

இதே மன நிலையில் அர்ச்சனா அங்கு இருக்கும் புள்ளி கேங்கை வச்சு செய்தால் அவர்களின் ஆட்டம் ஒடுக்கப்படும். நேற்றைய எபிசோடில் பிரதீப்பிற்கு ஆதரவாக பேசவில்லை அர்ச்சனா. உங்களிடம் கொடுக்கப்பட்ட அந்த பவரை நீங்கள் தப்பா உபயோகப்படுத்தியிருந்தால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் விளையாடியதாக நீங்கள் இருப்பீர்கள் என்று சரியாக சொல்லியிருந்தார்.

இது அந்த புள்ளி கேங்கை மிகவும் கோபப்படுத்தியது. அதனை தொடர்ந்து டென்ஷனான மாயா மிகவும் கொடூரமாக அந்த சின்ன பிக்பாஸ் போட்டியாளர்களை நடத்த ஆரம்பித்த  மாதிரி தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் இனி சின்ன பிக்பாஸ் வீட்டிற்கும் எனக்கு சம்பந்தமே இல்லை. ஒரு தலை பட்சமாகவே இருந்து கொள்கிறேன் என்று அவர்களிடம் மல்லுக்கு நின்று வருகிறார்.

இதையும் படிங்க: அந்த படத்தில இருந்து அடிச்சி பண்ணதா இது?!. தக் லைப் வீடியோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!…

இன்று வெளியான ப்ரோமோவிலும் விசித்ரா மற்றும் அர்ச்சனாவின் டூத் பிரஷ்களை பிடுங்கி வைத்துக் கொண்டு முதலில் டீ போட்டால்தான் டூத் பிரஷை தருவேன் என்று அவர்களை கொடுமையாக நடத்திக் கொண்டு வருகிறார். என்னதான் கோபம் , வெறுப்பு இருந்தாலும் ஒரு பொதுவான ப்ளாட்பார்முக்கு வந்த பிறகு இப்படி நடந்து கொள்வது மிகவும் அநாகரீகமாகத்தான் தெரிகிறது.

ஒரு கட்டத்தில் பெண்களாலேயே எனக்கு பாதுகாப்பு இல்ல பிக்பாஸ் என பொறுமை இழந்து அர்ச்சனா கத்துகிறார். அந்தளவுக்கு மாயாவுடன் சேர்ந்து பூர்ணிமா, ஜோவிகா, ஐஸூ என மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். வரும் கமல் எபிசோடில் மாயாவுக்கும் அவரை சார்ந்த புள்ளி கேங்கிற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும் என ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களும் கூறிவருகிறார்கள். இல்ல கமலும் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வாரா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் கண்டிப்பாக மாயாவின் அடாவடியை அடக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் கூக்குரலாக இருக்கிறது.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top