பசங்க நிலைமை ஐயோ பாவம்!.. பாதி பனியனை கிழிச்சி தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா...
Reshma pasupuleti: ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி விமான பணிப்பெண், டிவியில் ஆங்கர், செய்தி வாசிப்பாளர் என சில வேலைகளை அங்கு செய்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், கணவுருடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
அதன்பின் சென்னை வந்து செட்டில் ஆகி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று சீரியல்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 10 வருடத்திற்கும் மேல் பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். இடையிடையே சில திரைப்படங்களிலும் காமெடி வேடத்திலும் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: இது நம்ம அம்மணி காலம் போல..! த்ரிஷாவின் அடுத்த மெகா பட அறிவிப்பு.. இவருக்கு ஜோடியா..?
சூரியின் நடிப்பில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்திருந்தவர் இந்த ரேஷ்மாதான். இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து சீரியல் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். ஒருபக்கம் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் ஜீ தமிழ் சீரியல் விருதுகளில் ரேஷ்மாவுக்கு சிறந்த வில்லி விருதும் கிடைத்தது. ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா புடவை மற்றும் அரைகுறை உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார்.
அந்த வகையில், பாதி கிழிச்சிவிட்ட பனியனை அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.