பன்னியுடன் போஸ் கொடுத்த பிரபல நடிகை!.. மூஞ்ச வேற அப்படியே வச்சு.. காலக்கொடுமை!..

Published on: March 25, 2024
---Advertisement---

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ரானி இருவரும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.  தொடர்ந்து தங்கள் ஹனிமூனை 2 ஆண்டுகளாக பல வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டாடி வருகின்றனர்.

அதிகமாக சினிமா பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சேர்த்து வைத்த சொத்துக்களை ஜாலியாக செலவு செய்து வருகின்றனர். டார்லிங் படத்தின் மூலம் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி கோலிவுட்டில் அறிமுகமானார். கடந்த 2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 1983 படத்தில் தான் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தார் நிக்கி கல்ரானி.

இதையும் படிங்க: சூர்யா, சிவகார்த்திகேயன் லெவல்லாம் இதுதான்!.. விஜய்யோட இடத்தை நினைச்சுக் கூட பார்க்க முடியாதாம்!..

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் ஆதி பினிசெட்டியுடன் யாகவராயினும் நாக காக்க படத்தில் இணைந்து நடித்த நிக்கி கல்ரானிக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. தொடர்ந்து மரகத நாணயம் படத்தில் மீண்டும் இணைந்து நடித்த நிலையில், காதல் வலுவாக இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

தற்போது தாய்லாந்தில் உள்ள ’கோ சாமூய்’ எனும் பன்றி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்குள்ள பன்றியுடன் அதே போல முகத்தை வைத்துக் கொண்டு நிக்கி கல்ரானி கொடுத்த போஸ் ரசிகர்களை சட்டென பார்த்தால் நிக்கி தானா இது என்றே அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளது.

இதையும் படிங்க: ச்சே!.. என்ன கன்றாவிடா இது!.. பதறாதீங்க ’வாரிசு’ பட நடிகை லெக்கின்ஸ் போட்டுத்தான் இருக்காரு!..

இதில் யார் பன்றி என்றே தெரியவில்லை என கலாய்த்தும் கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். கணவர் ஆதியுடன் இணைந்து நிக்கி கல்ரானி வெளியிட்டுள்ள  புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை போட்டு வருகின்றனர்.

ஆதி கடைசியாக ஹன்சிகாவுடன் இணைந்து பார்ட்னர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ஃபிளாப் ஆனது. சீக்கிரமே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.