நிலா காயுது... பாடலை இளையராஜா இப்படித்தான் சொல்லிக்கொடுத்தாரா? ஜானகியோட ரியாக்ஷனைப் பாருங்க..!

#image_title
35ஆயிரம் பாடல்கள்... 3 வயசுல தொடங்கி இன்னும் பாடுறாங்க. 4 தேசிய விருதுகள் வாங்கிருக்காங்க. அவங்க தான் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.ஜானகி. இவரைப் பற்றி இசைஞானி இளையராஜா என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
ஒரு பாடகர் வர்றாங்கன்னா அவங்களா எப்படி அதைக் கிரியேட் பண்ணிப் பாட முடியும்? அதுக்கு நான் தானே சொல்லிக் கொடுக்கணும். எனக்குத் திருப்தி வர்ற வரைக்கும் பாட வைப்பேன். எத்தனை ரிகர்சல்? எத்னை டேக்? பாலு சங்கீத ஜாதி முல்லை பாடலை பாடுறாரு. ஓகே. அந்த ஃபோர்ஸ் எப்படி வருது? ஃபுல்லா இன்ஜெக்ட் பண்ணனும். அவரைப் பாடிருக்காரு. ஓகே. ஆனா நான் பாட வச்சேன்.

Nila kaayuthu song
இப்படித்தான் பாட்டு வேணும்னு சொன்னா பாடித்தானே ஆகணும். அது எத்தனை டேக், எத்தனை ரிகர்சல் அது எனக்குத்தானே தெரியும். ரிகர்சல் சரியா வரலன்னா ஒத்துக்கறது இல்லை. எரிச்சல் வரத்தான் செய்யும் என்கிறார் இளையராஜா. அதே போல சகலகலாவல்லவன் படத்துல வர்ற நிலாகாயுது பாடலை எஸ்.ஜானகி எப்படி பாடினார் என்பதையும் தெரிவித்துள்ளார்.
நிலா காயுது பாடலுக்கு பேஸ் என்னன்னா நல்லது நடந்தே தீரும்னு ஒரு படத்துல ஒரு பாடலை காபி ராகத்துல போட்டுருந்தேன். அதுக்குள்ள இந்த ஐடியா வந்து நான் யூஸ் பண்ணிருந்தேன். அந்த வகையில இதெல்லாம் ஒண்ணாதான வரும்னு சிலவற்றை சேர்த்துருந்தேன். சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சதும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டாங்க. அப்படியே வரணும்னு சொல்லிட்டேன். அதுல 90 பர்சன்ட் ஜானகி பாடிட்டாங்க. அப்படி உருவானதுதான் நிலா காயுது பாடல் என்கிறார் இளையராஜா.
1982ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான படம் சகலகலாவல்லவன். கமல், அம்பிகா, வி.கே.ராமசாமி, சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் தெறிக்க விட்டன. அதிலும் இளமை இதோ இதோ பாடல் புத்தாண்டு வாழ்த்துக்காக இன்று வரை கோலோச்சி வருகிறது. நிலா காயுது, நேத்து ராத்தி யம்மா பாடல்கள் இளசுகளை இன்று வரை துள்ளச் செய்து வருகின்றன. அதிலும் நிலா காயுது பாடலின் இடையே வரும் ஹம்மிங் வேற லெவல். இதை அவ்ளோ சூப்பராக மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி இருவரும் பாடியிருப்பார்கள்.