கோலிவுட்டின் ராசியான நடிகையே இவங்க தானாம்!.. ஹாட்ரிக் ஹிட் கொடுத்தா அல்வா போல அள்ளிடுவாங்களே!..

தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுத்தாலே அந்த நடிகையை அனைத்து ஹீரோக்களும் வரிசையாக புக் செய்து விடுவார்கள். இந்நிலையில், மலையாளத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்துள்ள நடிகை நிமிஷா சஜயன் அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்துள்ள நிலையில், அவருக்கு கோலிவுட்டில் திடீரென டிமாண்ட் ஜாஸ்தியாகி விட்டதாக கூறுகின்றனர்.
வெறும் 26 வயதுதான் ஆகுது என சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் பல வருடங்கள் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவர் போலவே நிமிஷா சஜயன் நடித்து வருகிறார். போன வருஷம் அவர் நடித்த சித்தா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே உருப்படியான படம் என்றால் அது அருண் விஜய் நடித்த மிஷன் பார்ட் 1 படம் தான் என்கின்றனர்.
இதையும் படிங்க: அடிவாங்கிய அன்னபூரணி.. இதுக்கு மேல முடியாது!.. பெரிய கும்பிடு போட்டு மன்னிப்புக் கேட்ட நயன்தாரா!..
மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரை விட நிமிஷா சஜயன் நர்ஸாக நடித்துள்ள நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
தொடர்ந்து 3 படங்களிலும் வெற்றியை ருசித்த நிமிஷா சஜயனுக்கு அடுத்தடுத்து பல பெரிய பட வாய்ப்புகள் அணிவகுத்து காத்துக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் கோலிவுட்டின் முன்னணி நடிகர் படத்திலும் நிமிஷா சஜயன் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து என்ன அதிரடியாக நிமிஷா சஜயனும் சம்பளத்தை ஏற்ற வேண்டியதுதான் என்கின்றனர்.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்திற்கு சூனியம் வைத்துக்கொண்ட விஜய்!.. எப்பவோ பேசினது இப்ப ஏழரை ஆயிடுச்சே!..