நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். நடிகராக இருந்த வரை அவர் மீதான விமர்சனங்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் எப்போது அவர் அரசியலுக்கு வந்தாரோ அப்போதே அவரைப் பற்றிய பல விமர்சனங்கள் வர துவங்கியது.
குறிப்பாக, அரசியலுக்கு வந்து இரண்டு வருடத்தில் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறார்.. திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என சொல்கிறார்.. இது அதீத நம்பிக்கை.. இது நடக்க வாய்ப்பே இல்லை.. தன்னுடைய ரசிகர்களை அவர் அரசியல் நெறிப்படுத்தவில்லை.. இவரே ஒரு அரசியல் தலைவர் இல்லை… கரூர் சம்பவம் நடந்த போது ஓடி ஒளிந்து கொண்டார்.. இரண்டு மாதங்கள் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை என்றெல்லாம் திமுகவினரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்..
அதேபோல் அதிமுகவும் தற்போது விஜயை விமர்சிக்க துவங்கியிருக்கிறது.. அந்த வகையில் அதிமுக நட்சத்திர பேச்சாளராக கருதப்பட்ட செய்தியாளர் நிர்மலா பெரியசாமி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது கூறியதாவது:
விஜய் எப்படி படம் எடுக்கிறார்? மாஸ்டர்ன்னு ஒரு படம் எடுத்தாரு.. அந்தப் படம் முழுவதும் குடிச்சிக்கிட்டே இருப்பாரு.. இதுல வேற அவர் காலேஜ் ப்ரொபசர்.. எப்படிப்பட்ட துரோகம்!.. சமூகத்துக்கு நீங்க பண்றீங்க.. தவறான எண்ணங்களை, விஷத்தை விதைக்கிறீங்க.. இதை பார்க்கிற என்னுடைய தமிழ் பிள்ளைகள் என்ன பண்ணும்? அப்ப குடிக்கிகிறது தப்பு இல்லன்னு தோணும்.. நம்ம தலைவரே குடிக்கிறார்.. நம்ம குடிச்சா என்னன்னு நினைக்க மாட்டாங்களா?.. நீங்க புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு சமமா பேசுறீங்க!..’ என பொங்கியிருக்கிறார்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…