கமலுடன் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த நடிகை!..படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு!..

Published on: October 3, 2022
kamal_main_cine
---Advertisement---

1988 ஆம் ஆண்டில் கமல் நடிப்பில் வெளியான திரில்லர் க்ரைம் சம்பந்தமான திரைப்படம் சூரசம்ஹாரம். இந்த படத்தை இயக்கியவர் சித்ரா லட்சுமணன். அப்போது இந்த படத்தில் நடிகை ராதாவை கதாநாயகியாக போடலாம் என கமலிடம் சொன்னபோது நானும் ராதாவும் நிறைய படங்களில் நடித்து விட்டதால் புதிதாக ஒரு நடிகையை தேர்வு செய்யுங்கள் என்ற யோசனையை கூறியிருக்கிறார்.

kamal1_cine

அப்போது அக்னி நட்சத்திரம் மூலம் மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாக இருந்தவர் நடிகை நிரோஷா. அவரையே போடலாம் என முடிவு செய்ய நிரோஷாவிடமும் கால்ஷீட் வாங்கிவிட்டார் இயக்குனர் சித்ரா. அப்போது படத்தின் முழு கதையையும் சொல்லி அவர் சம்மதம் தெரிவித்த பிறகு தான் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கின்றனர்.

kamal2_cine

அந்த கதையில் படுக்கை அறையில் நிரோஷாவிற்கும் கமலுக்கும் நெருக்கமான காட்சிகள் இருக்கும். கூடவே முத்தக்காட்சியும் இருந்தால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என எண்ணி அதை முழுவதுமாக விவரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதற்கும் சரி என சொல்ல அந்த காட்சியை படமாக்கியிருக்கின்றனர். அப்போது படுக்கையறை காட்சி என்பதால் படப்பிடிப்பில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் அனுமதித்து நிரோஷாவிற்காக இதை செய்திருக்கிறார் இயக்குனர்.

இதையும் படிங்கள்:சினிமான்னா உனக்கு என்னன்னு தெரியுமா… கண்டபடி திட்டிய ஷங்கர்… கதறி அழுத பரத்..

kamal3_cine

அப்போது அந்த காட்சியை படமாக்கி கொண்டிருந்த போது முத்தம் கொடுக்கும் நேரத்தில் என்னால இத செய்ய முடியாது என சொல்லிவிட்டாராம் நிரோஷா. உடனே இயக்குனர் சித்ராவிற்கு கடும் கோபம் வர எல்லாவற்றிற்கும் சம்மதித்து தானே வந்தார் என நினைத்து அன்றிலிருந்து படப்பிடிப்பை ஒரு மாத காலம் நிறுத்திவிட்டாராம். அதிலிருந்து அவரை தொடர்பு கொள்ளவும் இல்லையாம். கமல் என்ன நினைப்பார் என்று அஞ்சியே இருந்த சித்ரா வேறொரு கதாநாயகியை ஏற்பாடு செய்ய தீவிரம் காட்டிக் கொண்டு வந்திருக்கிறார்.

kamal4_cine

அந்த நிலையில் நிரோஷாவின் அம்மா அவ ஏதோ தெரியாம பண்ணிட்டா, அவளுக்கு இது தான் இரண்டாவது படம் என கெஞ்ச இதை கமலிடம் தெரிவிக்க அவரும் சரி நிரோஷாவே இருக்கட்டும் என சொல்லி படப்பிடிப்பை மறுபடியும் ஆரம்பித்திருக்கின்றனர். அதே காட்சி மறுபடியும் படமாக்க கமல் இயக்குனரிடம் அந்த முத்தக்காட்சி மட்டும் வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.