Biggboss Tamil 7
ஏப்பா லவ் பண்ணத்தான் அங்க போனீங்களா?!. எல்லை மீறிப்போகும் பிக்பாஸ் லீலைகள் – வைரலாகும் புகைப்படம்
BiggBoss Season7: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை 7சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசன்களை போன்று இல்லாமல் இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
முற்றிலும் இளைஞர்கள் பட்டாளத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபுல் ஃபன்னாக போய்க் கொண்டிருக்கிறது. யாருமே எதிர்பாராத திருப்பமாக நேற்று நடந்த கமல் ஷோவில் புதியதாக 5 பேர் வைல் கார்டு எண்டிரியாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் டிடி பார்த்த வேலை! கடுப்பாகி உட்கார்ந்த கார்த்தி
யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் வீட்டினுள் எப்போதும் போல் காதல் லீலைகளும் அரங்கேறி வருகின்றன. போன சீசன் வரை ஒரே ஒரு ஜோடிதான் பிக்பாஸ் வீட்டிலிருந்து காதல் ஜோடிகளாக போவார்கள்.
ஆனால் இந்த சீசனில் மூன்று ஜோடிகள் சும்மா கண்டண்ட்களை கொடுத்து வருகிறார்கள். நாங்கள் அப்படித்தான் பழகுவோம். ஆனால் காதல் ஜோடிகளாக இல்லை என்று ரவீனாவும் மணியும் இதுவரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: கார்த்திக்கின் நட்புக்காக நெப்போலியன் செஞ்ச அந்த காரியம்!. அட இது வேற வேற லெவல்!..
இவர்களை பார்த்து பொறாமை பட்டுக் கொண்டிருந்த ஐஸுவும் இப்போது நிக்ஷனிடம் தன் காதல் வலையை வீசியிருக்கிறார். அவர்கள் தான் இப்பொழுது பெரிய கண்டண்டாக மாறியிருக்கிறார்கள். ஓவியா ஆரவிற்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் மருத்துவ முத்தம் அரங்கேறியிருக்கிறது.
ஐஸுவும் நிக்ஷனும் ஒருவரையொருவர் மாறி மாறி முத்தம் கொடுத்த காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பப்பட்டது. இதுமட்டுமில்லாமல் ஒரே தட்டில் சாப்பிடுவது, ஐஸுவை நிக்ஷன் தூக்கி வீட்டிற்குள் உலா வருவது என கொஞ்சம் அவர்கள் செய்யும் செயல்கள் முகம் சுழிக்க வைக்கின்றது. இதற்கு ரவீனா , மணியே பரவாயில்லை என்பதை போல் இவர்கள் நடந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இதுக்காச்சும் இது நடந்துச்சே..! மூச்சு விட்ட லியோ படக்குழு..! இனி ஆட்டம் அதிரடியா இருக்கும்..
இன்னொரு பக்கம் பூர்ணிமாவிடம் விஷ்ணுவும் விக்ரமும் அவ்வப்போது நூல் விட்டு பார்க்கிறார்கள். ஆனால் அவரிடமிருந்து எந்தவொரு சிக்னலும் இதுவரை வந்ததாக தெரியவில்லை.