தோனி கேமியோலாம் இல்ல… ஆனா வேற ஒன்னு இருக்கு… வெளிப்படையா உடைச்சிட்டாரே வெங்கட் பிரபு…
GOAT: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் தல தரிசனம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு சுவாரசிய தகவல்களை இயக்குனர் வெங்கட் பிரபு கூதி இருப்பது வைரலாகி வருகிறது.
விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு முன்னால் வெளியாக இருக்கும் கடைசி சில படங்களில் முக்கியமாக அமைந்திருக்கிறது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்திருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் நடக்காமல் தடுத்த கோலிவுட்!.. விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா?!..
விஜய்யுடன் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடிக்கிறார். மைக் மோகன் இப்படத்தில் வில்லனாக வேடம் ஏற்றி இருக்கிறார்.
சர்ப்ரைஸ் ஆன இன்னொரு வில்லனும் படத்தில் இருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். முதலில் படம் டைம் டிராவல் படம் என கூறப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என தற்போதைய தகவல்கள் வெளியாகி வருகிறது. படத்தில் ஏகப்பட்ட கேமியோக்கள் மற்றும் சர்ப்ரைஸ் தகவல்களும் உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை திரிஷா, மறைந்த முன்னாள் நடிகர் கேப்டன் விஜயகாந்தின் ஏஐ எண்ட்ரி உள்ளிட்ட சிறப்பு விஷயங்கள் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: பெத்த அப்பா தட்டி கேட்டாரா? வரலட்சுமி குறித்த கேள்விக்கு குஷ்பூ காரசாரமான பதில்
இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறும்போது, முதலில் மகேந்திரசிங் தோனியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். ஆனால் அந்த தகவல் எங்களுக்கு முன்னாலே வெளியில் கசிந்து விட்டது. அதுவும் நடக்காமல் போனது. என்னுடைய எல்லா படங்கள் போல இப்படத்திலும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறும்.
சர்வதேச கிரிக்கெட் மேட்சை வைப்பதற்கு பதில் ஐபிஎல்-லை வைத்தால் ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகிவிடலாம் என்பதற்காக சென்னை மற்றும் மும்பை மோதும் மேட்ச்சின் காட்சிகள் மட்டுமே உள்ளே இடம் பெறும் எனவும் தெரிவித்திருக்கிறார். அந்த மேட்சில் தோனியின் காட்சி வரலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.