Cinema News
ஆர்வம் காட்டாத ரசிகர்கள்!.. காத்து வாங்கும் தியேட்டர்கள்.. கல்லா கட்டுமா லால் சலாம்?!..
Lal Salaam: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம்தான் லால் சலாம். இந்த படம் கிரிக்கெட் விளையாட்டில் எப்படி மதமும், அரசியலும் விளையாடுகிறது என்பதை பேசுகிறது. ஏற்கனவே 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யாவுக்கு இது மூன்றாவது திரைபபடம்.
ஒருபக்கம், தனுஷை விட்டு அவர் பிரிந்தபின் அவர் இயக்கியுள்ள முதல் திரைப்படம் எனவும் எடுத்துக்கொள்ளலாம். முதல் இரண்டும் சாதாரண படங்கள்தான். ஆனால், லால் சலாம் அப்படி இல்லை. அதற்கு காரணம் மகளுக்காக இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்திலும், கிரிக்கெட் வீரர்களாகவும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ‘லால் சலாம்’ படத்தில் இருக்கும் ட்விஸ்ட்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் ரஜினி! குவியும் பாராட்டுக்கள்
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரஜினியோடு நிரோஷா, செந்தில், கபில் தேவ், தம்பி ராமையா, ஜீவிதா என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. சென்னையில் பல தியேட்டர்களில் ஆன்லைன் முன்பதிவு மந்தமாக இருக்கிறது.
இதையும் படிங்க: இதைவிட ஒரு மகளுக்கு பெரிய கிரெடிட் இருக்குமா என்ன? ஐஸ்வர்யாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு
அதற்கு காரணம் ரஜினி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பதுதானா தெரியவில்லை. அதோடு, ரஜினியின் மீதுள்ள விமர்சனங்கள், சமூகவலைத்தளங்களில் அவருக்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்கள், குறிப்பாக விஜய் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சிப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்.
பல தியேட்டர்களில் இருக்கைகள் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக ரஜினி படத்தின் முதல்நாள் முதல் காட்சியில் இருப்பது போல மாஸ் இந்த படத்திற்கு இல்லை என சில ரஜினி ரசிகர்களே சமூகவலைத்தளங்கள் சோகமாக பதிவிட்டு வருகிறார்கள். லால் சலாம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று கல்லா கட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.