ஒருத்தர் கூட வாங்கலயே!.. லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா?!.. ஐயோ பாவம்...

by Rohini |   ( Updated:2024-02-11 04:04:59  )
lal
X

lal

Lal Salaam Movie: ரஜினி கேமியோ ரோலில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் போன்றோர் லீடு ரோலில் நடித்து வெளியான திரைப்படம் தான் லால்சலாம். இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் படம் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டிருந்தது. முதலில் வெறும் 7 கோடி பட்ஜெட்டில் ஐஸ்வர்யா படத்தை கொண்டு போக லைக்கா நிறுவனம்தான் பெரிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்கி கொண்டு வாருங்கள் என்று சொன்னதாக லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: அஜித் போட்ட கண்டிசன்.. ‘விடாமுயற்சி’ படக்குழு செய்த தவறே இதுதான்! ரிலீஸில் ஏற்படும் சிக்கல்

இந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் படத்தின் மொத்த வசுல் எவ்வளவு என தெரிந்துவிடும். இதற்கிடையில் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது என நேற்று விமான நிலையத்தில் ரஜினி கூறியிருந்தார்.

ஆனால் லால் சலாம் படத்தை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லை என்பதுதான் கொடுமை. பெரிய பட்ஜெட் அதுவும் ரஜினி நடித்திருக்கும் படம். ஆனால் ஏன் ஓடிடி நிறுவனம் இப்போது வரைக்கும் வாங்க வில்லை என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருந்தது.

இதையும் படிங்க: குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்த ஹீரோ!. கடுப்பாகி பானுமதி செய்த தரமான சம்பவம்!…

இதற்கான காரணத்தை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார். பெரிய பட்ஜெட் படங்களை வாங்குவதற்கு ஓடிடி நிறுவனம் அதன் விலையைக் குறைக்கப் போவதாக ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்ததாம்.

இப்போது லால்சலாம் படத்தை ஓடிடி நிறுவனம் வாங்கவில்லை என்றால் ஒரு வேளை அந்த விதிமுறை இப்போது நடைமுறைக்கு வந்திருக்கும் என தெரிகிறது என சித்ரா லட்சுமணன் கூறினார். ஆனால் லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ‘அப்பா இந்தப் படம் கண்டிப்பாக நேஷனல் அவார்டை வாங்கும் படமாக அமையும் என என் மகள் என்னிடம் கூறினார்’ என்று சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: எல்லோரும் தயங்கியபோது கமலுக்காக ரிஸ்க் எடுத்த ராஜ்கிரண்… இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..

Next Story