யாரும் கவலைப்படாதீங்க..! வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் தாமரைசெல்வி..!

by Manikandan |
யாரும் கவலைப்படாதீங்க..! வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் தாமரைசெல்வி..!
X

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிபி 12 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், கடந்த வாரம் எவிக்ஷனில் தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டார். ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு போட்டியாளர் தாமரைச்செல்வி.

மேலும் இவர் நிச்சயம் இறுதி வரை வந்து மேடை ஏறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சிலர் அவர் தான் வெற்றியாளர் என்று கூட பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் தாமரைச்செல்வி கடந்த வாரம் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தாமரையை வெளியேற்றியது தவறு என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவ்வப்போது பேசி வந்தனர்.

இந்நிலையில் ஐக்கி பெர்ரியுடன் சேர்ந்து யூடியூப் பக்கத்தில் தாமரை லைவ் போட்டுள்ளார். அப்பொழுது அதில் பேசிய தாமரைச்செல்வி, நான் வெளியேற்றப்பட்டதால் யாரும் கவலைப்பட வேண்டாம். எப்பொழுதும் போல சந்தோஷமாக இருங்கள்.

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. சிலர் வருத்தத்துடன் இருக்கிறீர்கள். அவ்வாறெல்லாம் இருக்க வேண்டாம். நீங்கள் அவ்வாறு இருப்பது தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இது வரை நான் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு நன்றி. இவ்வளவு நாள் வீட்டிலிருந்ததே நான் வெற்றி பெற்றதற்கு சமம் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story