விஜயை பார்த்து கத்துக்கோங்கப்பா! பாடாய்படும் கங்குவா.. வீர வசனம் பேசினா இப்படித்தான்

Published on: November 17, 2024
kanguva
---Advertisement---

கங்குவா படம் இந்தளவு ட்ரோல் ஆகும் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் படத்தின் வசூல் குறித்து வெவ்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. படத்தின் முதல் நாள் வசூலே 8 கோடி என்று சொல்லப்பட்டது. இப்படி இருந்தால் படம் எப்படி 2000 கோடி வசூலை அள்ளும் என முதல் நாளிலேயே நெட்டிசன்கள் அவர்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான படம் கங்குவா. கிட்டத்தட்ட 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பல மொழிகளில் வெளியானது. ஒரு பெரிய பேன் இந்தியா படமாக வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான கங்குவா திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத ட்ரோலுக்கும் ஆளானது.

Also Read

இதையும் படிங்க: இரு பக்கமும் பணத்தால் வந்த இடி!… நயன்தாரா திடீரென பொங்கியதற்கு இதுதான் காரணமா?!…

அதற்கு ஒரு முக்கிய காரணம் படம் ரிலீஸாவதற்கு முன் ஞானவேல்ராஜா பேசிய பில்டப்தான். ஏற்கனவே ரஜினியை பற்றி தேவையில்லாத கருத்துக்களை ஞானவேல்ராஜா வெளியிட அதுவே ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானார் ஞானவேல்ராஜா. இந்த நிலையில்தான் கங்குவா படம் 2ஆயிரம் கோடி வசூலை பெறும் என பெரிய அளவில் பேசியிருந்தார்.

அவர் மட்டுமில்லாமல் சிறுத்தை சிவா மற்றும் சூர்யாவும் படத்தை பற்றி ஆஹா ஓஹோனு பேசி பெரிய அலப்பறையே செய்து விட்டார்கள். இதுவே ரசிகர்களை ஒரு கட்டத்தில் எரிச்சலடைய வைத்தது. இது ஒரு பக்கம் பெரிய விமர்சனமாக போய்க் கொண்டிருக்க இப்போ தெரியுதா? உண்மையான கோலிவுட் கோட் தளபதிதான் என்ற ஒரு கருத்தும் பரவி வருகிறது.

இதையும் படிங்க: தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நடிகை நயன்தாரா…! அதுவும் எதுக்காக தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!

அதாவது பேன் இந்தியா நடிகரும் கிடையாது. ஊர் ஊராக சென்று ப்ரோமோஷனும் செய்யவில்லை. இசை வெளியீட்டு விழாவும் இல்லை. இருந்தும் முதல் நாளில் 126 கோடி, மொத்தமாக 455 கோடி என்று வசூல் செய்த விஜய், உண்மையில் கோலிவுட் GOAT தான் என கங்குவாவை ஒப்பிட்டு இந்த மாதிரியான விமர்சனமும் பரவி வருகிறது.

இதில் சொன்னதை போல கோட் படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் பண்ணவே இல்லை. இசை வெளியீட்டு விழாவும் நடத்தப்படவில்லை. ஆனால் சொல்லி அடிச்சாருல நம்ம கில்லி என்பதை போல் விஜய் மீண்டும் வசூல் சக்கரவர்த்தியாக நின்றார். ஆனால் அதற்கு நேர் எதிராக இருந்தது கங்குவா பட ரிசல்ட். ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதற்கு ஒரு சரியான உதாரணம் கங்குவா.