பெருமூச்சு விட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள்!.. சூரரைப் போற்று ரைட்டரை தட்டித் தூக்கிய லோகேஷ் கனகராஜ்!

by Saranya M |   ( Updated:2023-12-16 21:39:28  )
பெருமூச்சு விட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள்!.. சூரரைப் போற்று ரைட்டரை தட்டித் தூக்கிய லோகேஷ் கனகராஜ்!
X

லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ரஜினிகாந்த் மற்றும் விஜய் நடுவே நடைபெற்று வரும் வார்த்தைப் போரில் தானும் பங்கேற்கிறேன் என தேவையில்லாமல் தலையிட்டு சிக்கிக் கொண்டார்.

தலைவர் 171வது படத்திற்கு ரத்னகுமார் பணியாற்ற கூடாது என ரஜினிகாந்த் ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக சூரரைப் போற்று படத்திற்கு வசனங்கள் எழுதிய விஜய் குமாரை லோகேஷ் கனகராஜ் உடன் சேர்த்துக் கொண்டதாக அவரே சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக சொல்லி ரஜினி ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 10 படத்துக்கு ஒரு படம் தான் தேறுது!.. முழு சம்பளத்தை கேட்ட காமெடி நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல்?

உறியடி படத்தின் மூலம் பிரபலமான விஜய் குமார் தான் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தின் வசனகர்த்தா. ஃபைட் கிளப் படத்தில் ஹீரோவாக அவர் நடித்த நிலையில், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் வாங்கி வெளியிட காரணமும் அடுத்து தலைவர் 171வது படத்துக்கு அவர் வசனங்களை ஷார்ப்பா எழுத வேண்டும் என்பதற்காகத்தான் என்கின்றனர்.

இதுவரை பல படங்களில் ரத்னகுமார் உடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். தற்போது, ரத்னா அவருடைய படத்தை இயக்க சென்று விட்டார். இந்நிலையில், அடுத்து நம்பிக்கையான திறமையான ஒருவரை தேடிக் கொண்டிருந்த போது தான் விஜய் குமார் எனக்கு கிடைத்திருக்கிறார் என லோகேஷ் கனகராஜ் கோபிநாத் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 41 வயசுல இப்படி நச்சுன்னு இருக்காரே!.. சேரன் படத்தின் ஹீரோயினின் ஜொள்ளு விட வைக்கும் பிக்ஸ்!..

உறியடி விஜய் குமார் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் என்றும் தான் கமல் ரசிகர் என்றும் இருவரும் சேர்ந்து பணியாற்றும் படம் நிச்சயம் சிறப்பாக வரும் என எதிர்பார்க்கிறோம் என லோகேஷ் ரொம்பவே கான்ஃபிடன்ட்டாக உள்ளார்.

Next Story