Connect with us

Entertainment News

41 வயசுல இப்படி நச்சுன்னு இருக்காரே!.. சேரன் படத்தின் ஹீரோயினின் ஜொள்ளு விட வைக்கும் பிக்ஸ்!..

கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். அந்தப் படத்திற்கு பிறகு மலையாளத்தில் டைம் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழை விட மலையாளத்தில் விமலா ராமனுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தொடர்ந்து மலையாள படங்களிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

2008-ஆம் ஆண்டு சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரிட்டன் ஆனார். அந்த படத்திற்கு பிறகு, கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடிக்க ஆரம்பித்த விமலா ராமன் கடந்த 2019 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு எனும் பேய் படத்தின் மூலம் தான் மீண்டும் தமிழ் சினிமா பக்கமே திரும்பிப் பார்த்தார். தொடர்ந்து கிரான்மா மற்றும் அஸ்வின்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்னும் 4 வருஷம் ஆகுமா?.. துண்டு இல்லை.. பெட்ஷிட்டே விழும் போல.. விடுதலை 2வுக்கு கிடைக்குமா விடுதலை?

உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் வினய் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் வில்லனாக மாறினார். அந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஹிப்ஹாப் ஆதியின் வீரன் உள்ளிட்ட படங்களிலும் அவர் வில்லனாக நடித்துள்ளார். நடிகை விமலா ராமனும் வினய்யும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே உள்ளன.

41 வயதை கடந்து விட்ட விமலா ராமன் இன்னமும் இளமை பொங்க காட்சியளித்து வரும்நிலையில் லேட்டஸ்டாக அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வயதிலும் விமலா ராமன் இப்படி நச்சுன்னு இருக்காரே என ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சனிக்கிழமையே ஒரு விக்கெட் காலி!.. அப்போ சன்டே எபிசோடில் விரட்டி அடிக்கப் போறது அந்த காதல் இளவரசனையா?

google news
Continue Reading

More in Entertainment News

To Top