Connect with us

Biggboss Tamil 7

சனிக்கிழமையே ஒரு விக்கெட் காலி!.. அப்போ சன்டே எபிசோடில் விரட்டி அடிக்கப் போறது அந்த காதல் இளவரசனையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி ஆரம்பமானது. 80 நாட்களை நெருங்கி விட்ட நிலையில், இன்னமும் 20 நாட்களில் ஒட்டுமொத்த நிகழ்ச்சியே முடிந்து விடும்.

இதில், இந்த வாரம் ஒரு எவிக்‌ஷன் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 எவிக்‌ஷன்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே மிட் வீக் எவிக்‌ஷன் என வைத்து அனன்யா ராவை வெளியேற்றி விட்டார் பிக் பாஸ்.

இதையும் படிங்க: கோப்ரா ஊத்தி மூடிடுச்சு!.. டிமான்டி காலனி 2 தான் ஒன்லி ஹோப்!.. டிரெய்லர் தேறுச்சா இல்லையா?..

இந்த வாரம் நிக்சன் தப்பித்து விட்டார் என்றும் கூல் சுரேஷ் மட்டும் தான் வெளியேற்றப்பட உள்ளார் என தகவல்கள் லீக்கான நிலையில், தற்போது சனிக்கிழமை எபிசோடிலேயே கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டு விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூல் சுரேஷ் சனிக்கிழமையே சுவர் ஏறி குதித்த குற்றத்திற்காக வெளியேற்றப்பட்டு விட்டாரா? என பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அப்போ ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் இந்த வாரம் அந்த காதல் இளவரசன் நிக்சன் தான் எவிக்ட் ஆகப் போகிறாரா? ஒரு வழியாக போய் தொலையட்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் இந்த வாரம் 3வது எவிக்‌ஷனையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: இமான் மேட்டர் ஐ டோண்ட் கேர்!.. சிவகார்த்திகேயன் போட்ட போட்டோஸ் பாருங்க!..

இந்த சீசனில் தான் 5 வைல்டு கார்டு, அதுக்கு அப்புறம் 2 வைல்டு கார்டு பல முறை டபுள் எவிக்‌ஷன், இந்த வாரம் டிரிபிள் எவிக்‌ஷன் என படுமோசம் அடைந்திருக்கிறது. அடுத்த சீசனிலாவது பிக் பாஸ் நல்லா இருக்குமா பாஸ் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top