Connect with us
captain miller

Cinema News

2024-ல் ஒரு ஹிட் கூட இல்லை!.. இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!..

பொதுவாக திரையுலகில் ஒரு வருடத்தின் துவக்கத்திலேயே ஒரு சூப்பர் ஹிட் அடித்துவிட்டால் அந்த வருடம் சினிமாவுக்கான வசூல் நன்றாகவே இருக்கும் என்பது திரையுலக வியாபாரிகளின் கணக்கு. அதாவது ஜனவரி மாதம் வெளியாகும் படங்கள் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டும் என தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் ஆசைப்படுவார்கள்.

இது எல்லா வருடமும் நடக்கும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டது ஒருபக்கம் ஓடிடி-களும் வந்துவிட்டது. ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. எனவே, இனிமேல் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவார்களா என்கிற பயமே திரையுலகினருக்கு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ‘தல’ன்னா அது அஜீத் மட்டும்தான்… தைரியமாக சொன்ன அந்த பிரபலம் யார் தெரியுமா?..

அப்போதுதான் விஜய் நடிப்பில் மாஸ்டர் வெளியாகி நல்ல வசூலை பெற்று திரையுலகினருக்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால், இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு நல்ல படியாக அமையவில்லை. 2024ம் வருடம் துவங்கி இப்போது வரை 52 படங்கள் வெளிவந்து விட்டது.

ஆனால், இதில் ஒரு படம் கூட சூப்பர் ஹிட் அடிக்கவில்லை. பொங்கல் ரிலீஸாக ஜனவரி மாதம் வெளியான கேப்டன் மில்லர், அயலான் என இரு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. ரஜினி கேமியோ வேடத்தில் வெளியான லால் சலாம் கூட வெற்றியை பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

manju

manju

ஆனால், மலையாள மொழியில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழகத்தில் லால் சலாம் படத்தை விட அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இந்த படம் மட்டுமுல்ல 2024ல் வெளியான மலையாள படங்களில் மம்முட்டியின் பிரம்மயுகம், பிரேமலு மற்றும் ஓஸ்லர் என 4 படங்கள் இதுவரை சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமானின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. தோட்டக்காரரிடம் கண்டிஷன் போட்ட இசைப்புயல்!..

அதேபோல், தெலுங்கில் ஹனுமன், நான் சாமி ரங்கா என இரண்டு படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ஹிந்தியில் ஹனுமான், ஆர்டிக்கள் 370, tbmauj ஆகிய 3 படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. கன்னடத்தில் கூட Upadhyaksha என்கிற படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. ஆனால், தமிழில் வருடம் துவங்கி 75 நாட்கள் ஆகிவிட்ட பின்னரும் ஒரு படம் கூட சூப்பர் ஹிட் அடிக்கவில்லை.

அஜித்தின் விடாமுயற்சி, விஜயின் கோட், விக்ரமின் தங்கலான், ரஜினியின் வேட்டையன், கமலின் இந்தியன் 2 போன்ற படங்கள் இந்த குறையை போக்கும் என எதிர்பார்க்கலாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top