Connect with us
sivaji ganesan

Cinema History

கம்பீரத்தின் கடைசி அவதாரம் சிவாஜி கணேசன்!. நடிப்பில் மிடுக்கை காட்டிய நடிகர் திலகம்!..

வளர்ந்து வரும் நேரத்தில் கூட வயதான தோற்றங்களை ஏற்று நடித்தவர் நடிகர் சிவாஜி கனேசன். தனது நிஜ வயதிற்கும் அவர் நடித்த கதாபாத்திரங்களுக்கும் துளி அளவு கூட சம்மந்தம் இல்லாத கதாபாத்திரங்களில் அவர் துணிந்து நடித்ததுவுமே அவருடைய வெற்றியின் பின்னணியாக பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் என இவருடன் நடித்த நடிகர்கள் அனைவரும் அது தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பார்க்காமல் அதை தங்களது பாக்கியமாக கருதியும் வருகின்றனர்.

விமான நிலையத்தில் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல நேரிடும் பொழுதெல்லாம் அதிகாரிகள் அவரின் நடை மற்றும் தோரனையை கண்டு அவரை சோதனை செய்யாமல் பயணிக்க அனுமதி தந்ததும் உண்டாம். அவரின் மிடுக்கான உடைகள் அணியும் விதமும், அவரது கம்பீரமும் அதற்கு காரணம் என அவரது மகன் ராம்குமார் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகர்களோட கடைசி படங்கள் பற்றி பார்ப்போமா?!.. மறக்க முடியாத சிவாஜி – விஜயகாந்த்

பட உலகில் உச்சத்தில் இருந்து வந்தபோது “திருவருட் செல்வர்” படத்தில் அவர் நடித்த வயோதீக கதாப்பாத்திரம் அன்று ஆச்சரியத்தை கிளப்பும் விதமாகவே அமைந்தது, இப்போது நடுத்தர வயதை கொண்ட நடிகர்கள் கூட இளைஞர் வேடத்தில் இளமையான தோற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால், சிவாஜி நடித்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை” படத்தில் பதிமூன்று குழந்தைகளுக்கு தந்தையாக நடித்து அசத்தியதோடு மட்டுமல்லாது அவரை ரசித்துப்பார்க்கவும் வைத்திருப்பார். மேலும் அவரது கை விரல் நகக்கண் கூட நடிக்கும் என்று சொன்னால் அது மிகைப்பட்ட கருத்தாக நிச்சயமாக அமையாது.

“முதல் மரியாதை” படத்தில் முதல் காட்சியில் அவர் படுக்கையில் படுத்திருக்கும் வயதான தோற்றத்தில் காட்டப்படும். அப்பொழுது அவரை சுற்றி சில சிறுவர்கள் சூழ்ந்து நிற்பார்கள். அவர்களை பார்த்து உறுமல், உறுமி மட்டுமே தனது கோவத்தை வெளிப்படுத்தியிருப்பார். அவரது அசத்தலான நடிப்பிற்காகவே அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதையும் படிங்க: சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்!.. கடைசி வரியை அப்படியா எழுதுவார்?!

கமல்ஹாசனுடன் அவர் நடித்த “தேவர் மகன்” படத்தில் அவரது மிடுக்கான தோற்றமும், இயல்பான நடிப்பும் இன்றும் பேசப்படுகிறது. “படிக்காதவன்’, “விடுதலை”, “படையப்பா” படத்தில் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்தது இருவரின் ரசிகர்களை பெரு மகிழ்ச்சியடைய செய்தது. அதிலும் “விடுதலை” படத்தில் வரும் ‘நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்டுப்பாருங்க’ பாடலில் ‘இவர்தான் சூப்பர்ஸ்டாருங்க’ என வரும் வரிகள் ரஜினியை குறிப்பிடும் படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த வரி வரும்போது சிவாஜியை காட்டி ரஜினி கையசைத்து அது சிவாஜிக்கே பொருந்தும் என்பது போல செய்திருப்பார்.

இது மூத்த நடிகரான சிவாஜியின் மீது ரஜினி வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் காட்டுவதை போலவே அமைந்திருக்கும். விஜயுடன் சிவாஜி நடித்த’ ஒன்ஸ்மோர்” படத்தில் தனது மனைவியான சரோஜாதேவியை பிரிந்திருந்த போது அவருடைய காதலை நினைத்து பார்க்கும் காட்சிகளில் இளைஞர்களுக்கு கூட போட்டியாகும் விதமாக நடித்திருப்பார்,

google news
Continue Reading

More in Cinema History

To Top