ஒரு செருப்பு விஷயத்தில் எம்.ஜி.ஆரை கண்டித்த கலைவாணர்.. இவ்வளவு நடந்திருக்கா!...
எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், பாலைய்யா, நம்பியார், தங்கவேல், வி.கே.ராமசாமி என பல நடிகர்கள் நாடகங்களிலிருந்து வந்தவர்கள்தான். நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் சினிமாவில் நுழைந்தவர்கள். வறுமையிலிருந்து வசதி வாய்ப்பு வரை எல்லாவற்றையும் பார்த்தவர்கள்.
எம்.ஜி.ஆருக்கு அரசியல் குரு அண்ணா என்றால் சினிமாவில் கலைவானர் என்.எஸ். கிருஷ்ணன்தான் அவரின் குரு. அவரின் அறிவுரையை ஏற்று அவர் சொல் படியே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கொண்டிருந்த காலம் அது. ஒரு படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வந்தது. அப்போது ஒரு நீரோடையை எம்.ஜி.ஆர் தாண்டி குதித்த போது அவர் அணிந்திருந்த செருப்பு அறுந்துவிட்டது.
உடனே என்.எஸ்.கிருஷ்ணனிடன் ‘அண்ணே வாருங்கள். எனக்கு ஒரு புதிய செருப்பை வாங்கி வருவோம்’ என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அப்போது எதையோ யோசித்த என்.எஸ்.கிருஷ்ணன் ‘இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு போகலாம் ராமச்சந்திரா’ என்றாராம். எம்.ஜி.ஆரும் அடுத்த நாள் புது செருப்பு வாங்க தயாராகி என்.எஸ்.கிருஷ்ணனிடம் சென்றாராம். அப்போது, காகிதத்தால் சுற்றப்பட்ட ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தாராம் என்.எஸ்.கிருஷ்ணன்.
எம்.ஜி.ஆர் அதை பிரித்து பார்க்க அவரின் பழைய செருப்பு அதில் இருந்துள்ளது. ‘ராமச்சந்திரா நேற்று பிய்ந்துபோன உன் செருப்பை தைத்து, பாலிஷும் போட்டு வைத்துவிட்டேன். இப்போது இது புதிய செருப்பு போல் இருக்கிறது. இது இன்னும் 6 மாதத்திற்கு தாங்கும். நீ இப்போது குறைவாகத்தான் சம்பளம் பெறுகிறாய். எனவே, காசை வீணடிக்காதே. அதை சேமித்து வை’ என்று சொன்னராம் என்.எஸ்.கிருஷ்ணன்.
நீ நிறைய சம்பாதிக்கும் நிலை வரும்போது உன்னை வாழ வைக்கும் மக்களுக்கு உன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் நீ செய்ய வேண்டும் என என்.எஸ். கிருஷ்ணன் ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு கடைசிவரை எம்.ஜி.ஆர் கடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே பிட்டு படம் பார்த்த எஃபெக்ட்டு!.. மொத்தமா காட்டி விருந்து வைக்கும் லாவண்யா…