Connect with us

Cinema History

சாதி, மத பேதங்களுக்கு சவுக்கடி கொடுத்த கவிஞர்கள்…என்னென்ன படங்கள்னு தெரியுமா?

தமிழ்ப்படங்களில் துவக்கக் காலத்தில் இருந்தே சாதி மதத்திற்கு எதிரான பாடல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு கவிஞர்களும், பாடல் ஆசிரியர்களும் சாதி மதம் கூடாது என வலியுறுத்திப் பாடியுள்ளனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை முன்வைத்துப் பல பாடல்கள் வந்துவிட்டன.

பழம்பெரும் பாடலாசிரியர் பூமி பாலசுதர். இவர் 1935ல் இறை தூதரான நபிகள் நாயகத்தின் புரட்சியை விளக்கும் பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடல் இடம்பெற்ற படம் மேனகா. சத்ய சன்மார்க்க துங்க சாந்த முகம்மது நபியே என்று தொடங்குகிறது பாடல்.

அதே போல தமிழ் பண்டிதர் ராஜகோபாலய்யர் 1947ல் தியாகி என்ற படத்திற்காக சாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு பாடல் எழுதியுள்ளார். சொல்லுவோம் சொல்லுவோம் இல்லை சாதி பேதமென்று எனத் தொடங்குகிறது இந்தப் பாடல்.

1954ல் வெளியான பத்மினி படத்தில் வேல்சாமிக் கவி என்ற அற்புதமான பாடலாசிரியர் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாட்டை மையமாகக் கொண்டு அருமையான பாடலைத் தந்துள்ளார்.

பாடுபட்டு வேலை செய்யும் பாட்டாளி இல்லாட்டா மாடி வீட்டு மனுஷனெல்லாம் என்ன செய்யுவான்? என்று கேள்வி கேட்கிறது இவரது பாடல்.

அதே பாடலில் வேட்டி நெய்யும் நெசவாளி இல்லாமேப் போனாக்கா, விசிறி மடிப்புக் காரனெல்லாம் என்ன செய்யுவான்? என்று யோசிக்க வைத்திருப்பார்.

தமிழ்த்திரை உலகின் ஒரு முக்கியமான கவிஞர் உடுமலை நாராயண கவி. இவரது பாடல்கள் என்றாலே அதில் ஒரு புரட்சிகரமான கருத்து இருக்கும்.

Manamagal

1951ல் மணமகள் என்ற படத்திற்காக இவர் எழுதிய அற்புதமான பாடல் சாதி, மத பேதத்தை வேண்டாம் என வலியுறுத்துகிறது. அந்தப் பாடலில் சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க…சொல்லிச் சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்கன்னு சொல்கிறார்.

இந்தப் பாடலில், சாதி, மத பேதம், ஏழை, பணக்காரன், பஞ்சம், பட்டினி என பல கருத்துகளை முன்வைக்கிறார்.

1949ல் கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன் அப்பவே இந்தக்காலம் எப்படிப்பட்டது என்பதைத் தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டார். அது மட்டுமல்லாமல் இந்தக்காலத்தை அந்தக்காலத்துடனும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

அன்னியர்கள் நமையாண்ட தந்தக்காலம், நம்மை நாம் ஆண்டுகொள்வ திந்தகாலம் என்கிறார். அந்தக்காலத்திற்கும், இந்தக்காலத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் புட்டு புட்டு வைக்கிறார் கலைவாணர்.

அதே போல ஜாதி, மத பேதங்கள் இல்லை என கவிஞர் மருதகாசி, 1956ல் வெளியான ரம்பையின் காதல் படத்தில் எழுதியுள்ளார். சமரசம் உலாவும் இடமே நம்வாழ்வில் காணா என்ற இந்தப்பாடலில் நம் மனம் லயிக்கத்தான் செய்கிறது.

இதே பாடலில் சாதியில் மேலோரென்றும், தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகில் இதுதான் என்று தெளிவாகச் சொல்கிறார்.

1958ல் வெளியான புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் கவிஞர் முத்துக்கூத்தன் அற்புதமான பாடலை எழுதியுள்ளார்.

செந்தமிழே வணக்கம் என்ற இந்தப் பாடலில் சாதி சமயங்கள் இல்லா நல்ல சட்ட அமைப்பினைக் கொண்டே நீதிநெறி வழிகண்டாய் எங்கள் நெஞ்சினிலும் வாழ்வினிலும் ஒன்றாகி நின்றாய் என்கிறார்.

Aasai Mugam

1965ல் வெளியான ஆசைமுகம் படத்தில் கவிஞர் வாலி, இன்னொருவர் வேதனை என்ற பாடலில் சாதி பேதங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். 1975ல் வெளியான பல்லாண்டு வாழ்க படத்திற்காக புலமைப்பித்தன் எழுதிய ஒன்றே குலம் என்று பாடுவோம் பாடலை மறக்க முடியுமா?

1961ல் பாவமன்னிப்பு படத்திற்காக கண்ணதாசன் வந்த நாள் முதல் இந்த நாள் வரை என்று சூப்பரான பாடலை எழுதியிருப்பார். இந்தப் பாடலில் இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி …பாரினில் இயற்கை படைத்தவை எல்லாம் பாவி மனிதன் பிரித்து வைத்தானே…என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருப்பார்.

இதே போல் தமிழ்ப்பட உலகில் இன்னும் பல திரைப்படப்பாடல்கள் வந்துள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top