More
Categories: Cinema History Cinema News latest news

திரும்ப திரும்ப பாடச் சொல்லி என்.எஸ்.கேவை கடுப்பேத்திய இயக்குனர்! பதிலுக்கு கலைவாணர் செய்ததுதான் ஹைலைட்டு

Actor NSK: தமிழ் சினிமாவில் நல்ல ஒரு சிந்தனைவாதி என நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனை குறிப்பிடலாம். சிந்தனைக்குரிய கருத்துக்களை தன் நகைச்சுவை மூலம் மக்களுக்கு எளிதில் புரியும்படி கூறி சிரிக்க வைப்பதில் வல்லவர். சிந்தனையையும் தாண்டி சிறந்த பகுத்தறிவாளரும் கூட.

சினிமாவில் இவருக்கு என்று ஒரு தனி இடமே உண்டு. எம்ஜிஆர் இவரை தன் ஆஸ்தான குருவாகவே ஏற்றுக் கொண்டார். அவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு என்.எஸ்.கே மீது ஒட்டுமொத்த சினிமாவுமே தனி மரியாதை வைத்திருந்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: 17 வயசுலயே அப்பாவிடம் அந்த ஆசையை சொன்ன கமல்!.. காம ராசன் என சும்மாவா சொன்னாங்க!..

நடிகர், பாடகர் என தான் நடிக்கும் படங்களில் பாடியே நடிப்பவர்.ஏராளமான படங்களில் தன் மனைவியுடனே ஜோடியாக நடித்திருக்கிறார். அவரும் ஒரு சிறந்த பாடகிதான். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘சந்திரலேகா’.

அந்தப் படத்தில் சர்கஸ் கோமாளியாக நடித்திருப்பார் என்.எஸ்.கே. அந்தப் படத்தில் என்.எஸ்.கே பாட வேண்டிய ஒரு பாடல் இருந்தது. அதனால் ரிக்கார்டிங்கிற்கு வந்திருக்கிறார் என்.எஸ்.கே. அவரை பாடச் சொல்லி எஸ்.எஸ்.வாசனும் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு பிறகுதான் கவர்ச்சி நடிகைன்னு தெரியும்! அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்டே!..

முதன் முறை பாட எஸ்.எஸ். வாசனுக்கு திருப்தி இல்லையாம். இரண்டாம் முறையும் பாடச் சொல்லியிருக்கிறார். அப்போதும் வாசனுக்கு திருப்தி இல்லையாம் . மறுபடியும் பாடச்சொல்லியிருக்கிறார். என்.எஸ்.கே. பாடியிருக்கிறார்.

ஆனால் அப்போதாவது திருப்தி அடைந்தாரா என்றால் இல்லையாம். மீண்டும் பாடச் சொல்லியிருக்கிறார். ஆனால் என்.எஸ்.கே நான் ஒன்றும் உங்களுக்காக பாடவில்லை. என் ரசிகர்களுக்காகத்தான் பாடுகிறேன். இனிமேல் உங்களுக்கு பிடித்தமாதிரி எல்லாம் பாட முடியாது என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.

இதையும் படிங்க: துருவ் விக்ரமை விடாமல் துரத்தும் பாலா!.. பொறந்தநாள் அதுவுமா நிம்மதியா விடமாட்டுறாரே!..

அங்கு இருந்தவர்களுக்கு  ஒரே ஆச்சரியமாம். ஏனெனில் எஸ்.எஸ்.வாசனை அதுவரை யாரும் கோபத்துடனோ அல்லது எதிர்த்தோ பேசியது இல்லையாம். அதனால் வாசனும் வெளியே வர அவரிடம் என்.எஸ்.கே ‘பாருங்க. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெறும். மறுபடியும் கேட்டுப் பாருங்கள் ’ என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்.

இப்படி கோபப்பட்டு போனவர் படத்தில் மீண்டும் நடிக்க வரப்போகிறாரா? என்ற பயமும் இருந்ததாம். உடனே வேறு பாடலை ரிக்கார்டு செய்யலாம் என அங்கு இருந்தவர்கள் கூற வாசனோ இல்லை . இந்தப் பாடலை கேட்டுப் பார்ப்போம் என கேட்டிருக்கிறார். அதன் பிறகுதான் வாசனுக்கு புரிந்தது.

இது ரசிகர்களுக்காக என்.எஸ்.கே பாடியது . அதனால் இந்தப் பாடல் இருக்கட்டும் என்று சந்திரலேகா படத்தில் அந்தப் பாடலை இடம்பெற செய்திருக்கிறார். தான் கொண்ட கொள்கையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர் என்.எஸ்.கே என இந்த தகவல் மூலம் நாம் அறிய முடிகிறது.

Published by
Rohini

Recent Posts