காதலுக்காக என்.எஸ்.கே சொன்ன மாபெரும் பொய்!.. உண்மையை தெரிந்து கொண்ட மனைவியின் ரியாக்ஷன்?..
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நட்சத்திர ஜோடிகளாக விளங்கியவர் நடிகர் என்.எஸ்.கே மற்றும் டி.ஏ.மதுரம் ஜோடி தான். ஆரம்பத்தில் வறுமையின் காரணமாக நாடகக் கொட்டைகளில் சோடா விற்கும் சிறுவனாக தான் வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார் என்.எஸ்.கே. அதன் பிறகு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தவர்,
பின் ஒரு சமயத்தில் சொந்தமாக நாடகக் கம்பெனியையும் வாங்கினார். சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தனது நகைச்சுவை மூலம் பாடலாகவும் காட்சிகளாகவும் சினிமாவில் காண்பித்தார். நடிப்பது மட்டுமில்லாமல் வில்லுப்பாட்டுக் காரராகவும் சிறப்புற்றார்.
மேலும் சொந்தக் குரலில் பாடல்களை பாடியும் சொந்தமாக வசனங்களை எழுதி அதை சினிமாவில் நகைச்சுவை காட்சிகளாக காட்டினார். திரைப்படத்துறை நன்கு வளர்ச்சி பெற்ற பொழுது அதில் நுழைந்து சதிலீலாவதி படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் என்.எஸ்.கே.
வசந்தசேனா படத்தின் மூலம் மதுரமும் என்.எஸ்.கேவும் முதன் முதலில் சேர்ந்து நடித்தனர். முதல் படத்திலேயே மதுரத்தை மிகவும் பிடித்து போக அவரிடம் தன் காதலை தன் உதவியாளரை வைத்து சொல்ல சொல்லியிருக்கிறார் கிருஷ்ணன். மேலும் உன்னுடனேயே இருக்க ஆசைப்படுகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : “நம்பவச்சி ஏமாத்திட்டீங்களேப்பா!!”… 2022-ல் அதிக எதிர்பார்ப்பில் மொக்கை வாங்கிய டாப் 5 திரைப்படங்கள்…
இதை கேட்ட மதுரம் நேராக கிருஷ்ணனிடம் வந்து என்னுடன் இருக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னீர்களாமே என்று கேட்க அதற்கு ஆம் எனக் கூறியிருக்கிறார். அது இருக்கட்டும் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று மதுரம் கேட்க இல்லை என பதிலளித்திருக்கிறார்.
அதன் பின் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனராம். ஆனால் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்ததாம். அது ஒரு சமயத்தில் மதுரத்திற்கு தெரிய வர பெரிய பிரளயமே வரும் என எதிர்பார்த்திருந்த கிருஷ்ணனுக்கு ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது.
அவரின் முதல் திருமணம் எந்த விதத்திலும் இவர்களின் வாழ்க்கையை பாதிக்கவில்லை என்பது தான் உண்மை. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட படங்களில் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தனர். ஆனால் கிருஷ்ணனின் முதல் திருமணம் பற்றி எந்த செய்தியும் இல்லை என்பது உண்மை. இந்த தகவலை சித்ரா லட்சுமணன் அவரின் யுடியூப் சேனலில் கூறினார்.