கோட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி… போட்றா வெடிய!

Published on: September 18, 2024
---Advertisement---

GoatMovie: விஜயின் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அர்ச்சனா கல்பாத்தி தற்போது  அறிவித்திருக்கிறார். இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை கோட் என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார்.  யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Also Read

இதையும் படிங்க: அஜித்தும் அரவிந்த்சாமியும் இந்த விஷயத்தில் ஸ்டிரிக்டா இருக்காங்க! ஃபாலோ பண்ணுங்கப்பா

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல், மீனாட்சி செளத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு வந்த பின்னர் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினர். இது டைம் டிராவல் படமாக இருக்கும் எனவும் நம்பப்பட்டது.

ஆனால் தன்னுடைய பேட்டிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இது டைம் ட்ராவல் படம் எல்லாம் இல்லை. இது வேறு மாதிரியான கதையாக இருக்கும் என தெரிவித்தார். அழகிய தமிழ் மகன் படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் தன்னுடைய வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால் அப்படத்தினை விட 100 மடங்கு அதிகமாக இப்படத்தில் அவர் செய்திருக்கும் வில்லத்தனம் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: அஜித்தும் அரவிந்த்சாமியும் இந்த விஷயத்தில் ஸ்டிரிக்டா இருக்காங்க! ஃபாலோ பண்ணுங்கப்பா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை குவித்தது. இருந்தும் இப்படத்தின் டிக்கெட் விற்பனை அமோகமாக தொடங்கியது. குறிப்பிட்ட நாளில் வேறு படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் திரைப்படத்திற்கு நான்கு நாட்கள் எல்லா தியேட்டரும் ஹவுஸ் ஃபுல் ஆகியது.

இந்நிலையில் 13 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் அர்ச்சனா கல்பாத்தி திரைப்படம் 413 கோடியை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். வெறித்தனமான ரன் இன் பாக்ஸ் ஆபிஸ் எனவும் பதிவிட்டு இருக்கிறார். வாரிசு மற்றும் லியோ திரைப்படங்களும் 400 கோடியை வசூல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனா ட்வீட்டைக் காண: https://x.com/archanakalpathi/status/1836368237556023571